/* */

திருவண்ணாமலை மருந்து கடையில் விதிமீறல் - அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்

திருவண்ணாமலையில் மருந்து கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்து, விதிமீறலை கண்டறிந்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மருந்து கடையில் விதிமீறல் - அதிகாரிகள் ஆய்வில் அம்பலம்
X

திருவண்ணாமலையில், மருந்து கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூர் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு குற்ற புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ஏ.டி.ராமச்சந்திரன், வேலூர் மண்டல மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அம்முகுட்டி ஆகியோர் தலைமையில் மருந்து ஆய்வாளர்கள் ராமு, ஹேமலதா, கோகிலா ஆகியோர் கொண்ட குழுவினர் திருவண்ணாமலையில் உள்ள மருந்து கடைகளில் திடீரென ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை நகரில் உள்ள அரசுப்பள்ளி அருகே உள்ள 5 கடைகளுக்கு ரகசிய ஆட்களை, அடிமை பழக்கத்தை உருவாக்க கூடிய மருந்துகளை வாங்க அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். அப்போது ஒரு கடையில் அடிமை பழக்கத்தை உருவாக்கக்கூடிய ஒரு ஊசி மருந்து குப்பியை கொடுத்து உள்ளனர்.

இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன், திருவண்ணாமலை டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் மருந்து ஆய்வாளர்கள், சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்தனர். அப்போது மருந்து சீட்டு பதிவேடு பராமரிக்காதது, மருந்து விற்பனை செய்ததற்கான ரசீது கொடுக்காதது, மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து விற்பனை செய்தது என்பன உள்ளிட்ட விதிமீறல்களின் கீழ் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அனைத்து மருந்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் போதை தரும் மருந்து பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. அடிமை பழக்கத்தை உருவாக்கக்கூடிய மருந்து சம்பந்தப்பட்ட தகவல்கள் மற்றும் போதை பொருட்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் எந்த நேரமும் 9498410581 மற்றும் 9344789429 ஆகிய தொலை பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

Updated On: 30 Dec 2021 3:00 AM GMT

Related News