/* */

திருவண்ணாமலையில் ஆடிமாத பௌர்ணமி கிரிவலம் 11-ந் தேதி காலை தொடக்கம்

திருவண்ணாமலையில் ஆடிமாத பௌர்ணமி கிரிவலம் 11-ந் தேதி காலை தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் ஆடிமாத பௌர்ணமி கிரிவலம் 11-ந் தேதி காலை தொடக்கம்
X

திருவண்ணாமலையில் ஆடி பிரதோஷ விழாவையொட்டி மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிப்படுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

இந்த மாதத்திற்கான பௌர்ணமி 11-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.

பௌர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், ஆடிமாத பௌர்ணமி பிரதோஷ விழா நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On: 10 Aug 2022 1:02 AM GMT

Related News