/* */

திருவண்ணாமலையில் வருமான வரித்துறைக்கு சொந்த கட்டடம்

வருமான வரித்துறைக்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வருமான வரித்துறைக்கு சொந்த கட்டடம்
X

வருமான வரித்துறைக்காக புதிய கட்டிடம் கட்டுவதற்கான கல்வெட்டினை முதன்மை தலைமை வருமானவரி ஆணையர் கீதா ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் வருமான வரித்துறைக்கு சொந்த கட்டிடம் ரூபாய் 4.14 கோடி மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது அதையொட்டி புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் கீதாரவிச்சந்திரன் அடிக்கல் நாட்டி பூமி பூஜையில் கலந்துகொண்டார்.

இந்த கட்டிடம் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் வருமான வரி செலுத்துவோர் சேவைக்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதியும் இடம்பெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆணையர் ஜெகன் , கூடுதல் ஆணையர் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Dec 2021 2:39 AM GMT

Related News