/* */

சிறப்பான முறையில் பணியாற்றிய போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

சிறப்பான முறையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு டி.ஐ.ஜி.பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

HIGHLIGHTS

சிறப்பான முறையில்  பணியாற்றிய  போலீசாருக்கு டிஜிபி  பாராட்டு
X

பாராட்டு சான்றிதழ்களை வழங்கிய டிஜிபி முத்துசாமி. உடன் திருவண்ணாமலை எஸ்.பி., கார்த்திகேயன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு நேரத்தில் சிறப்பான முறையில் ரவுண்டு பணி ஈடுபட்ட போலீஸ்காருக்கு டிஜிபி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியின் போது குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

சிறப்பான முறையில் ரோந்து பணியில் ஈடுபட்ட வெறையூர், ஆரணி நகரம் மற்றும் பாச்சல் ஆகிய போலீஸ் நிலைய போலீசாரை வேலூர் சக டி.ஐ.ஜி. முத்துசாமி நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்.

தூசி போலீஸ் கட்டுப்பாட்டு பகுதியில் 16 இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள்

வெம்பாக்கம் தாலுகா தூசி போலீஸ் நிலைய கட்டுப்பாட்டு பகுதியில் மாங்கால் கூட்ரோடு, அய்யங்கார் குளம் கூட்ரோடு, ராந்தம் கூட்ரோடு பகுதி உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் 16 இடங்களில் 45 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நிகழ்ச்சிக்கு செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். தூசி இன்ஸ்பெக்டர் குமார் முன்னிலை வகித்தார். மாங்கால் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் துணைத் தலைவர் அருள் சம்மந்தம், கண்காணிப்பு கேமரா செயல்பாடுகளை தொடங்கி வைத்தார்.

இதில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் , தூசி பகுதியை சேர்ந்த காவல்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Feb 2023 3:21 AM GMT

Related News