/* */

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 3வது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
X

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில்  நடைபெற்ற மாணவர் சேர்க்கை கலந்தாய்வு. 

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் 3வது கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கி, நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 2 ஆயிரம் இடங்களுக்கு, 13 ஆயிரத்து 260 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதை தொடர்ந்து, தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.

முதற்கட்டம் மற்றும் இரண்டாவது கட்ட கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வகுப்பறை, ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில், கூடுதலாக 25 சதவீத மாணவர் சேர்க்கைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

எனவே பி எஸ் சி, பி ஏ, பி .காம், பட்ட வகுப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான மூன்றாவது கட்டக் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் முன்னிலையில், இன்று நடந்த கலந்தாய்வில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கலந்தாய்வு நாளை மற்றும் திங்கட்கிழமையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 5-ஆம் தேதி, ஆங்கிலம் மற்றும் தமிழ் பட்ட வகுப்புகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் நூற்றுக்கு அறுபது மதிப்பெண்கள் வரை பெற்ற மாணவர்கள், இந்த கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

Updated On: 30 Sep 2021 1:36 PM GMT

Related News