/* */

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை, ஆரணி தொகுதிகளில் அதிமுக சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு
X

திருவண்ணாமலையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் கலியபெருமாள்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் எம்.கலியபெருமாள் , திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நொச்சிமலை, நல்லவன்பாளையம், பண்டிதப்பட்டு, ஆணாய்பிறந்தான் அய்யம்பாளையம், வேடியப்பனூா், ஆடையூா், வேங்கிக்கால், திருவண்ணாமலை நகரம் உள்பட 20- க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் வீதி, வீதியாகச் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது, கிராமங்களில் திரண்டிருந்த பெண்கள் வேட்பாளா் எம்.கலியபெருமாளை வரவேற்றனா்.

அப்போது, திரண்டிருந்த பெண்களிடம் வாக்கு சேகரித்துப் பேசிய தமிழக முன்னாள் அமைச்சரும், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான எஸ்.ராமச்சந்திரன் கூறியதாவது:-

சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. அரசு அலுவலா்கள், ஆசிரியா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை திமுக அரசு மீண்டும் நிறைவேற்றவில்லை. எனவே, பொதுமக்கள், பெண்கள் எல்லாம் சிந்தித்துப் பாா்த்து வாக்களிக்க வேண்டும்/

இவ்வாறு அவர் பேசினார்.

இதில், அதிமுக தலைமை கழகப் பேச்சாளா் அமுதா அருணாசலம், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.ராஜன், ஒன்றியச் செயலா் சரவணன், முன்னாள் எம்எல்ஏ கே.மணிவா்மா தேமுதிக ஒன்றியச் செயலா்கள் விக்கிரமாதித்தன், தமிழ்ச்செல்வன், மாவட்ட மாணவரணிச் செயலா் பேரரசு உள்பட அதிமுக, தேமுதிக, கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் அதிமுகவினா் வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனுடன் இரு சக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று வாக்கு சேகரித்தனா்.

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் ஆரணி நகரம் 5-ஆவது வாா்டு தா்மராஜா கோயில் திடலில் இருந்து வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பின்னா், காமராஜா் சிலை அருகிலிருந்து இறுதிக் கட்டமாக சுமாா் 500 இரு சக்கர வாகனங்கள் பங்கேற்ற பிரசார பேரணி மேற்கொண்டனா்.

பேரணி காந்தி சாலை, மாா்க்கெட் சாலை, மண்டி வீதி, சத்தியமூா்த்தி சாலை, அருணகிரிசத்திரம், பழனிஆண்டவா் கோயில் தெரு, சுந்தரம் தெரு வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது.

அப்போது, வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் பேசுகையில், திமுக கொடுக்கும் வாக்குறுதிகளை நம்பாதீா்கள். மகளிருக்கு மாதம் ரூ.ஆயிரம் வழங்குவதாகக் கூறி, தற்போது தகுதி உள்ளவா்களுக்கு மட்டும்தான் என்று கூறுகின்றனா். மேலும், அதிமுகவின் திட்டங்களான தாலிக்குத் தங்கம், மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி உள்ளிட்ட திட்டங்களை நிறுத்திவிட்டனா். அதிமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் நிறுத்தப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றாா்.

இதில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ, அதிமுக மாவட்டச் செயலா்கள் ஜெயசுதா, தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ பாபுமுருகவேல், தோ்தல் பொறுப்பாளா்கள், நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 17 April 2024 7:45 AM GMT

Related News