Begin typing your search above and press return to search.
கிணற்றில் விழுந்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்
ஜமுனாமரத்தூரில் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த பெண் உயிருடன் மீட்கப்பட்டார்.
HIGHLIGHTS

கிணற்றில் விழுந்த பெண்ணை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை அடுத்த அத்திப்பட்டு கிராமத்தில் 60 அடி ஆழமுள்ள கிணறு உள்ளது. அந்த பகுதியை சேர்ந்த செல்லதுரை என்பவரின் மனைவி சுபாஷினி (வயது 30) கிணற்றில் தவறி விழுந்து விட்டார். அவரின் கூச்சல் சத்தத்தை கேட்ட அங்கிருந்தவர்கள் ஜமுனாமரத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வந்து கிணற்றில் தவறி விழுந்த சுபாஷினியை உயிருடன் மீட்டு அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஜமுனாமரத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.