திருவள்ளூர் அருகே டிரைவர் வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை திருட்டு

திருவள்ளூர் அருகே டிரைவர் வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருவள்ளூர் அருகே டிரைவர் வீட்டின் கதவை உடைத்து 12 சவரன் நகை திருட்டு
X

திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பணந்தோப்பு பகுதியை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் தனசேகர் (40). இவர், தொடுகாடு ஊராட்சிமன்ற தலைவர் வெங்கடேசனிடம் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். தனசேகரின் மனைவி லட்சுமி, மருந்தாளுநர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மறுநாள் இரவு தனது வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருக்கும் பொருட்கள் சிதறி கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 12சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து மணவாள நகர் காவல் நிலையத்தில் தனசேகர் புகார் அளித்தார் புகாரின் பேரில் .போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து இது குறித்து வழக்கு பதிந்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Updated On: 23 Sep 2022 11:00 AM GMT

Related News