/* */

தேர்தல் புறக்கணிப்போம்: பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு

கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக மாதவரம் சட்டமன்ற தொகுதி பாலவேடு கிராம மக்கள் அறிவித்தனர்.

HIGHLIGHTS

தேர்தல் புறக்கணிப்போம்: பாலவேடு கிராம மக்கள் அறிவிப்பு
X

கிராம மக்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம் சட்டமன்ற தொகுதி பாலவேடு கிராம ஊரட்சி சாஸ்திரி நகர் பகுதியில் 500 குடியிருப்புகளில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் 60 ஆண்டுகளுக்கு மேல் சுமார் 3 தலைமுறைகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் மின் இணைப்புகள், ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டைகளைப் பெற்று வசித்து வருகின்றனர்.

தாங்கள் வசித்து வரும் குடியிருப்புகளுக்கு 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கலைஞர் இலவச வீட்டுமனை பட்டவை கிராம நத்தம் பட்டவாக மாற்றி வழங்கிட வேண்டும்,முறையான மழைநீர் வடிகால்வாய் அமைத்தல் வேண்டும், தரமான சாலைகள் அமைத்து தர வேண்டும், சுகாதாரமான குடிநீர் போன்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர் ,சட்டமன்ற உறுப்பினர்,துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனு வழங்கியும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

இதனால் சம்பந்தப்பட்ட சாஸ்திரி நகர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை மறியல் செய்ய முயற்சித்த 200க்கும் மேற்பட்ட கிராம மக்களை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குறிப்பாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பட்டா அரசாங்கம் பதிவேட்டில் பதியவில்லை என தெரிவிக்கின்றனர்.கடந்த 7 ஆண்டுகளாக அரசு சலுகைகள் முடக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன் வைக்கும் கிராமத்தினர்..வீட்டு வரி,குடிநீர் வரி உள்ளிட்டவையும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக அரசைக் கண்டித்தும், தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

சாஸ்திரி நகர் முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடி கட்ட முயன்ற நிலையில், அங்கு வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசாரால் கொடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதனால் ஆத்திரம் அடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முற்பட்டபோது கிராம மக்களை தடுத்து நிறுத்தினர்.

இதனால் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறியும் சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம் போராட்டகாரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.. கிராம மக்களிடம் மனுக்களை பெற்ற வருவாய் கோட்டாட்சியர் புதிய ஆய்வு மேற்கொண்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வழிவகை செய்து கொடுப்பதாக தெரிவித்தார் இதனை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 13 April 2024 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?