/* */

பள்ளி மாணவர்கள் சார்பில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் போதைப் பொருட்களுக்கு எதிரான மாணவர்களின் பேரணியை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பள்ளி மாணவர்கள் சார்பில் போதை  எதிர்ப்பு விழிப்புணர்வு பிரசாரம்
X

மாதிரி படம்

திருவள்ளூரில் பள்ளி மாணவர்களால் வரையப்பட்ட, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஓவிய பதாகைகளையும், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டு மாணவர்களின் பேரணியை தொடக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பள்ளி மாணவர்களால் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவிய பதாகைகளையும், போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த மாவட்ட முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசார வாகனத்தையும் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பிரசாரம் திருவள்ளூர் முக்கிய சாலையில் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தடைந்தது. இந்நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோ.அரிக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சரஸ்வதி, மற்றும் அரசு அலுவலர்கள் மாணவர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2023 3:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  2. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  4. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  5. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  6. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  8. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்த நாள்: பெருந்துறையில் நடமாடும் வாகனம்...
  9. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  10. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?