/* */

பூந்தமல்லியில் பைக் சாகசம்; பொதுமக்களை அச்சுறுத்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு

பூந்தமல்லியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

HIGHLIGHTS

பூந்தமல்லியில் பைக் சாகசம்; பொதுமக்களை அச்சுறுத்திய 7 பேர் மீது வழக்குப்பதிவு
X

பாெதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டிச்சென்ற பைக்குகள்.

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக அபாயகரமாக இருசக்கர வாகனங்களை ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்ய, சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜவால் உத்தரவிட்டார்.

அதன் பேரில் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை பூந்தமல்லியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் மோட்டார் சைக்கிள்களில் தலைக்கவசம் அணியாமல் சாகசத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். மேலும் அபாயகரமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 1100 விதம் 7700 அபராதமாக வசூலிக்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற செயலில் ஈடுபட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 9 Aug 2021 8:17 AM GMT

Related News