ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை
பொன்னேரியில் உள்ள ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை நடத்தினர்.
HIGHLIGHTS

பைல் படம்.
கடந்த 2001-இல் ஆதிதிராவிட மக்களுக்காக கொசப்பூர் என்ற பகுதியில் அப்போது பொன்னேரி வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த போது, 139 பேருக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போது அம்பத்தூர் வருவாய் துறையின் கீழ் வரும் நிலையில், அப்போது பட்டா வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து சென்னை ஆலந்தூரில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வாளர் வர்னிகாஸ்வரி தலைமையில் 4 லஞ்ச ஒழிப்பு போலீசார், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மாடியில் செயல்படும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தினர்.
2001-இல் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், அது தொடர்பான நகல்கள் மட்டுமே இங்கு உள்ளதாகவும், சென்னை குறளகத்தில் அசல் கோப்புகள் உள்ளதாகவும், நகல் கோப்புகளை யாருக்கும் அனுப்ப கூடாது எனவும் கூறி விட்டு லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருவாய்த்துறையில் ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்கியது தொடர்பான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதால் வருவாய்த்துறையினர் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது.