/* */

கும்மிடிப்பூண்டியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்

பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றகோரி கும்மிடிப்பூண்டி பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

கும்மிடிப்பூண்டியில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்
X

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் உள்ள ராஜ்குமார் திருமண மண்டபத்தில் கும்மிடிப்பூண்டி பேரூர் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கும்மிடிப்பூண்டி நகர செயலாளர் இளஞ்செல்வன், நகரத் தலைவர் அஸ்வின்ராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில்,சிறப்பு அழைப்பாளர்களாக மாநில மாணவர் அணி சங்க செயலாளர் இரா.கீர்த்தி ரதன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் வ.மு.பிரகாஷ், மாவட்டத் தலைவர் எஸ்.வி.ரவி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில்,எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு? எதிர்கொள்வது என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளும்,கட்சியை பலப்படுத்த கிளைகள் தோறும் கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என பேசினர்.

மேலும்,கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினை,சாலை வசதி பிரச்சனை, மின்விளக்கு பிரச்சனை, பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பிரச்சினை, அனைத்து பேருந்துகளும் புறவழிச்சாலையில் செல்லாமல் பேருந்து நிலையம் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொது மக்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில்,புதிய நிர்வாகிகளுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டது.இதன் பின்னர்,தமிழர்களின் "வீர விளையாட்டாம்" சிலம்ப விளையாட்டை செய்து காட்டிய மாணவர்களுக்கும், ஆசானுக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். இக்கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய,பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் ஆர்.விக்னேஷ் வரவேற்றார். முடிவில்,இ.கண்ணன் நன்றி கூறினார்.

Updated On: 30 Oct 2023 9:15 AM GMT

Related News