/* */

பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரியபாளையத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பெரிய பாளையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின்பேரில் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் பொது சுகாதார நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பாக மனித சங்கிலி நிகழ்ச்சி பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இதில் திருவள்ளூர் சுகாதாரப் பகுதி மாவட்டத்தின் கீழ் செயல்படும் எல்லாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மாவட்ட சுகாதார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியாராஜ் அறிவுறுத்தலின் பேரில் மனித சங்கிலி மூலம் அனைவரும் வாக்களிப்போம் , 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்வோம் என முதன் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சங்கீதா தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆய்வாளர் முரளி ஆகியோர் முன்னிலையில் கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் , மக்களை தேடி மருத்துவத்தில் பணிபுரியும் பெண் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரம் வழங்கினர்.

Updated On: 29 March 2024 9:41 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  6. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  7. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  8. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  9. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  10. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!