Begin typing your search above and press return to search.
உடுமலை அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்து ஒருவர் பலி
உடுமலை அருகே இருசக்கர வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் ஒருவர் பலியானார்.
HIGHLIGHTS

உடுமலை அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முனிசாமி. ஓட்டல் நடத்தி வரும் இவர் பொள்ளாச்சியிலுள்ள மகளைப் பார்ப்பதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அவர் உடுமலையை அடுத்த பெதப்பம்பட்டி அருகே சென்று கொண்டிருந்த போத இருசக்கர வாகனத்தில் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. முனிசாமி வண்டியை விட்டு இறங்குவதற்குள் அவர் மீதும் தீப்பிடித்தது. இதில் முனிசாமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.
நடுரோட்டில் மொபட் தீப்பிடித்து எரிந்து ஒருவர் உடல் கருகி உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து குடிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.