Begin typing your search above and press return to search.
உடுமலை வேளாண் அலுவலகத்தில் ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைப்பு
உடுமலை வேளாண் அலுவலகத்தில், ஆடிப்பட்டத்துக்கான இடுபொருள் வைக்கப்பட்டு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்து உள்ளது.
HIGHLIGHTS

கோப்பு படம்
இது குறித்து, உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளதாவது: நடப்பு ஆடிப்பட்ட சீசனில் விவசாயிகளுக்கு தேவையான, நெல்-கோ 51, உளுந்து, கொண்டைக்கடலை, நிலக்கடலை, சோளம் விதைகள், நுண்ணுயிர் உரங்கள், சிறுதானிய நுண்ணூட்டம் ஆகியவை வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
சாளையூர் குறிச்சிக்கோட்டை துணை வேளாண் விரிவாக்க மையங்களில், உயிர் உரங்கள் நுண்ணூட்டம் ஆகியன இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. மேலும், விவரங்களுக்கு, வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.