திருப்பூர் ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் விற்பனை

இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருப்பூர் ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் விற்பனை
X

பைல் படம்.

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனம் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை விற்பனை செய்கிறது. இந்த இரு பிரிவுகளிலும் சிலிண்டர் இணைப்பு பெற கேஸ்3 ஏஜென்சிகளில் ஆதார் எண், முகவரி சான்று ஆகிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

இதனிடையே திருப்பூர், சென்னை ,கோவை போன்ற ஊர்களுக்கு வேலைக்காக இடம் பெயரும் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் நகரங்களில் முகவரி சான்று இல்லாததால் சிலிண்டர் இணைப்பு பெற சிரமப்பட்டனர். அதே போல் வெளிமாநில தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் போன்றவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயிலுடன் இணைந்து மினி சிலிண்டர் ரேஷன் கடைகளில் விற்க கூட்டுறவுத்துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக திருப்பூர் அரண்மனைபுதூர் பகுதியில் உள்ள தெற்கு நியாய விலை கடையில் இந்த திட்டமானது இன்று துவங்கப்பட்டது. இரண்டு கிலோ, ஐந்து கிலோக்களில், இந்த சிலிண்டர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாகவும் வெளி மாவட்டம் மற்றும் மாநில தொழிலாளர்களின் வசதிக்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆதார் கார்டு அல்லது அவர்களது விலாசம் குறித்து ஏதோ ஒரு ஆவணத்தை காண்பித்து சிலிண்டர்களை பெற்று செல்லலாம். தற்போது திருப்பூர் நகரில் முதல் முறையாக இத்திட்டமானது இக்கடையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் வரவேற்பு பொறுத்து விரைவில் ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 23 March 2023 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கோரமண்டல் கோர விபத்து: ரயிலில் பயணித்த இன்னும் 101 பேரை காணவில்லை
  2. உலகம்
    உக்ரைன் போர்: ரஷ்ய தாக்குதலில் உடைந்த சோவியத் காலத்து அணை
  3. லைஃப்ஸ்டைல்
    heart attack in tamil-ஹார்ட் அட்டாக் வராமல் தடுப்பதற்கு வழிகள் என்ன?...
  4. டாக்டர் சார்
    hibiscus meaning in tamil நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ...
  5. கோயம்புத்தூர்
    அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றிய பெண் யூடியூபர் கைது
  6. கோவை மாநகர்
    ஒடிசா சம்பவத்தை தொடர்ந்து ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் தீவிரம்
  7. கரூர்
    கரூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகம்: கலெக்டர் பிரபுசங்கர்...
  8. டாக்டர் சார்
    high bp symptoms in tamil நோய்களில் ’’அமைதியான கொலையாளி ’’ யார்...
  9. அரசியல்
    ஒரே மேடையில் ஓ.பி.எஸ்- தினகரன்:இ.பி.எஸ். சுக்கு எதிரான அடுத்த நகர்வு
  10. நாமக்கல்
    திருச்செங்கோட்டில் விரைவில் கண்ணகி கோட்டம் : எம்எல்ஏ. ஈஸ்வரன் உறுதி