/* */

கிளினிக் போறீங்களா, ஜாக்கிரதை! போலிகளால் வெளிவந்த அதிர்ச்சித்தகவல்

அவினாசியில் போலி கிளினிக் கண்டறியப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக, சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

கிளினிக் போறீங்களா, ஜாக்கிரதை! போலிகளால் வெளிவந்த அதிர்ச்சித்தகவல்
X

அவினாசி போலி கிளினிக்கில் கைப்பற்றப்பட்ட, காலாவதியான பாராசிட்டமால் மாத்திரை 

திருப்பூர் மாவட்டம், அவினாசி கைகாட்டிபுதுாரில் உள்ள ஒரு 'கிளினிக்'கில் போலி அலோபதி மருத்துவர் பணியாற்றி வருவதாக கிடைத்த தகவலின்படி, சமீபத்தில் அந்த கிளினிக், சுகாதாரத்துறையினரால் 'சீல்' வைக்கப்பட்டது;

இது தொடப்ராக, போலி மருத்துவர் ஜெயகுமார், கைது செய்யப்பட்டார். இந்த கிளினிக்கில் பராமரிக்கப்பட்ட ஆய்வகம், நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அனைத்தையும், சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

இதில், பல அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்துள்ளன. ஆய்வகத்தில், மருந்து மாத்திரைகளை வைக்க பயன்படுத்தும், குளிர்சாதன பெட்டி, உரிய முறையில் பராமரிக்கப்படாமல், அதில், மருந்துடன், பெண்கள் பயன்படுத்தும் பூ உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

அதே போன்று, நோயாளிகளுக்கு ஊசி செலுத்த பயன்படுத்தப்படும் 'சிரின்ச்' ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பின், அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், அங்கு பழைய ஸிரின்ச்கள், வைக்கப்பட்டிருந்தன. அவை சுடுநீரில் 'ஸ்டெர்லைஸ்' செய்யப்பட்டு மீண்டும், மீண்டும் பயன்படுத்த வைக்கப்பட்டிருந்ததா என, சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த கிளினிக்குகளில், வட மாநில தொழிலாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதை தான் பிரதானமாக கொண்டுள்ளனர். அருகேயுள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் இங்கு சிகிச்சை பெறுவதற்கான பதிவேடை கைப்பற்றினோம். கிளினிக்கில், பரிந்துரைக்கப்படாத வலி நிவாரணி ஊசி மருந்து நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.

இந்த மருந்து செலுத்திய பின், கடுமையான காய்ச்சல், உடல் வலி உடனடியாக நீங்கிவிடும். ஆனால், மீண்டும் சில நாட்களில் இத்தகைய பிரச்னை வரும். இத்தகைய வலி நிவாரணி மருந்துகளை தொடர்ச்சியாக செலுத்தினால், ஓரிரு ஆண்டுகளில் சிறுநீரக பிரச்னை வருவதற்கும் வாய்ப்புண்டு. எனவே, எங்களின் நடவடிக்கைக்கு உள்ளான கிளினிக் மட்டுமின்றி, இதுபோன்று ஆங்காங்கே செயல்படும் கிளினிக், மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறை, பராமரிப்பு, மருத்துவ கழிவுகளை கையாளும் விதம் குறித்து, விரிவான விசாரணை மேற்கொண்டு, அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க உள்ளோம். இவ்வாறு, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

Updated On: 4 April 2022 8:52 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...