/* */

கொள்ளையை மறைக்க கொலை முயற்சி-5 பேர் கைது

கொள்ளையை மறைக்க கொலை முயற்சி-5 பேர் கைது
X

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தை மறைக்க, கொலைத் திட்டம் தீட்டிய ஊழியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாணியம்பாடியில் உள்ள பெரியபேட்டையைச் சேர்ந்த பாலசுப்ரமணி என்பவர், பல்வேறு இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில், அதே பகுதியைச் சேர்ந்த சந்திரா மற்றும் சோனியா ஆகியோர் பணிபுரிந்தனர். அங்கு கொண்டு வரப்படும் நகை மற்றும் பணத்தை கண்காணிப்பது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியப் பொறுப்பு என தெரிகிறது.

கடந்த டிசம்பர் மாதம் தலைமை அலுவலகத்தின் கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது தான், சத்தமின்றி ஒரு குற்றச்சம்பவம் அரங்கேறியிருப்பது அதிகாரி பாலசுப்ரமணிக்கு தெரிய வந்தது. அலுவலக கணக்கில் இருந்து 24 லட்சம் ரூபாய் பணமும், 46 சவரன் நகையும் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஊழியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு பணியில் இருந்த சந்திரா மற்றும் சோனியா ஆகியோரே பணத்தையும், நகைகளையும் திருடியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் கொடுக்க எண்ணியபோது, பாலசுப்ரமணியிடம் மன்னிப்புக் கேட்ட பெண்கள் இருவரும், திருடிய பணம், நகைகளை திருப்பிக் கொடுத்து விடுவதாக உறுதியளித்தனர். ஆனால் செய்த தவறுக்காக அவர்களை பணி நீக்கம் செய்த பாலசுப்ரமணி, திருடிய பணத்தைத் தருமாறு நிர்பந்தித்து வந்திருக்கிறார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பாலசுப்ரமணி வீட்டிற்குள் திடீரென புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், பாலசுப்ரமணியின் மனைவியைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். அதுகுறித்த விசாரணையில் விஷ்ணு, பிரகாஷ், அங்கப்பன் என்பவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

நிதி நிறுவனத்தில் திருடிய பணத்தைக் கேட்டு நிர்பந்தித்து வந்த பாலசுப்ரமணியை கொலை செய்வதற்காக இம்மூவரையும் வைத்து சந்திராவும், சோனியாவும் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. கொலை முயற்சி தவறியதால் இக்கும்பல் சிக்கிய நிலையில், 5 பேரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் திருடப்பட்ட பணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 21 Jan 2021 6:13 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...