/* */

தமிழ் பேரறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளை 77 வது நினைவு தினம்

தமிழறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளையின் 77 வது நினைவு நாளில் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்த மேயர் பி.எம்.சரவணன்

HIGHLIGHTS

தமிழ் பேரறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளை 77 வது நினைவு தினம்
X

தமிழ் பேரறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளையிளின் 77 வது நினைவு தினத்தை முன்னிட்டு உருவப்படத்துக்கு மரியாதை செய்த மேயர் பி.எம்.சரவணன்

தமிழ் பேரறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளை அவர்களின் 77 வது நினைவு தினத்தை முன்னிட்டு மேயர் பி.எம்.சரவணன் தமிழ் பேரறிஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி டவுனை சார்ந்த கா.சுப்பிரமணியபிள்ளை பல்வேறு சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். இவரது தமிழ் இலக்கிய சமய நூல் படைப்புகளை வரலாற்று நூல்கள் கதை சமய நூல்கள் அறிவியல், கலை, பதிப்பு நூல்கள், ஆங்கில நூல்கள் ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் என பிரிக்கலாம் இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் பேரறிஞர் கா.சுப்பிரமணியபிள்ளை 77ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (30-04-22) திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நினைவு தூணில் அனுசரிக்கப்பட்டது.

இந்நினைவு நாளில் மேயர் பி.எம்.சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் தமிழ் பேரறிஞரின் நினைவு தூணில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதன் பின் தமிழ்பேரறிஞர் அவர்களின் பேரன் சுப்பிரமணியபிள்ளை கா.சுப்பிரமணிய பிள்ளையின் நூலை வெளியிட மேயர் பி.எம்.சரவணன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் நித்திய பாலையா, வஉசி மணிமண்டப நூலக வாசகர் வட்ட தலைவர் மணி, பாரதி முத்தமிழ் மன்ற தலைவர் புத்தனேரி செல்லப்பா, 63 நாயன்மார்கள் சத்திரம் தலைவர் நடராஜ்சுந்தரம் மற்றும் ஓவியர் வள்ளிநாயகம் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டு தமிழ் பேரறிஞர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மவர்தூவி மரியதை செலுத்தினார்கள்.

Updated On: 30 April 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  5. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  7. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  8. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...