/* */

காட்டுப்பகுதியில் ஆட்டு வியாபாரி சடலம் மீட்பு : போலீஸார் தீவிர விசாரணை

Goat trader's body recovered in Nellai forest area

HIGHLIGHTS

காட்டுப்பகுதியில்  ஆட்டு வியாபாரி சடலம் மீட்பு : போலீஸார் தீவிர விசாரணை
X

கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் நெல்லை- மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர்.

நெல்லை மாவட்டம் கரையிருப்பைச் சேர்ந்த ஆட்டு வியாபாரியின் சடலம் காட்டு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி( 53 ). இவர் ஆடு வளர்ப்பதுடன் பிற இடங்களில் இருந்து ஆடுகளை வாங்கி விற்பனையும் செய்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் மாயாண்டியை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர்.அன்றைய தினம் வெகு நேரம் ஆகியும் மாயாண்டி வீடு திரும்பாத நிலையில், அவரது உறவினர்கள் தச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மாயாண்டி காணாமல் போனது தொடர்பாக மேற்கொண்டுவரும் விசாரணையில் இதுவரை எந்த முனனேற்றமும் இல்லை என கூறி கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் நெல்லை- மதுரை நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனிடைய தொடர்ந்து தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயாண்டிய தேடி வந்த நிலையில், தாழையூத்து ஹவுசிங் போர்டு காலனி அருகிலுள்ள காட்டுப் பகுதியில் மாயாண்டியின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினார்.

முதல் கட்ட விசாரணையில் மாயாண்டியை அவரது நண்பர்கள் அழைத்து சென்று குடிக்க வைத்து கொலை செய்தார்களா? அல்லது வேறு எதுவும் காரணமா என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்பாக நெல்லை மாநகர துணை ஆணையர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

Updated On: 1 July 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...