/* */

30 ஆண்டுகள் தமிழக சட்டசபையின் கதாநாயகன் பெரியவர் மீ.பக்தவச்சலம் : 124வது பிறந்தநாள் விழா

5தடவை பெரியவரைச் சந்தித்தேன், பெயருக்கேற்ப அற்புத மனிதர் பக்தவச்சலம் என்பதை நேரில் உணர்ந்தேன் - தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா

HIGHLIGHTS

30 ஆண்டுகள் தமிழக சட்டசபையின் கதாநாயகன் பெரியவர் மீ.பக்தவச்சலம் : 124வது பிறந்தநாள் விழா
X

இம்பா சிவசுப்பிரமணியன், ம.சு.பல்கலை நூலகர் பாலசுப்பிரமணியன், தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா, பக்தவத்சலம் அறக்கட்டளை ஆலோசகர் I0B. கந்தசாமி பிள்ளை, இயக்குநர் சு.சண்முகவேலன் உட்பட சமூக ஆர்வலர்கள் பலர்   மரியாதை செலுத்தினர்.

முன்னாள் தமிழக முதல்வர் பெரியவர் மீ.பக்தவச்சலத்தின் 124-வது பிறந்தநாள் விழா திருநெல்வேலி நகரில் காட்சிமண்டபம் அருகே உள்ள இந்து தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக நூலகத் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. பக்தவத்சலம் அறக்கட்டளை ஆலோசகர் I0B கந்தசாமிபிள்ளை பக்தவச்சலம் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அறக்கட்டளை இயக்குநர். சு.சண்முகவேலன் வரவேற்புரை ஆற்றினார்.

பள்ளிச்செயலரான தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா "பெரியவர் பக்தவத்சலத்தின் கட்சிப்பணி, நிர்வாகப்பணி, ஆட்சித்திறன்" பற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் நெல்லை மாவட்ட இம்பா தலைவர் எல்.ஐ.சி சிவசுப்பிரமணியன் இனிப்பு வழங்கி வாழ்த்திப் பேசினார். கம்பன் கழக செயலாளர் முருகன், பிஜே.பி நெல்லை மண்டல தலைவரும், முன்னாள் பள்ளி மாணவருமாகிய ஆனந்தராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். காங்கிரஸ் கார்த்திக், வெங்கடேஷ் ஆறுமுகம், கலையரசன், சங்கரநாராயணன், காசிவிஸ்வநாதன், ஆசிரியர் சுப்பிரமணியன், பொன்பசுமைநாதன் என கட்சி பேதமின்றி சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர் நிறைவாக பள்ளி தலைமையாசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.

இம்பா சிவசுப்பிரமணியன், ம.சு.பல்கலை நூலகர் பாலசுப்பிரமணியன், தேசிய நல்லாசிரியர் சு.செல்லப்பா, பக்தவத்சலம் அறக்கட்டளை ஆலோசகர் I0B. கந்தசாமி பிள்ளை, இயக்குநர். சு.சண்முகவேலன் காங்கிரஸ் கார்த்திக் ஆகியோர் மரியாதை செலுத்திய போது.

இந்த விழாவில் தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா ஆற்றிய சிறப்புரை:

"அப்பா போல் பிள்ளை" என்று சொல்லுவதுதான் வழக்கம் அதற்கு மாறாக "மாமனைப்போல் மருமகன்" எனும் புதிய முறையை உண்டாக்கித் தந்தவர் நசரத்போட்டை சி.என்.முத்துரங்கமுதலியார் மருமகன் மீ. பக்தவத்சலம் ஆவார். என்னுடைய வாழ்நாளில் ஐந்து தடவை அவரை சந்திக்கும் வாய்ப்பை பெற்றேன். பெயருகேற்ப கருணை உள்ள அற்புத மனிதர் தான் மீஞ்சுர் பக்தவத்சலம் என்பதை நேரடியாக உணர்ந்தேன்.

இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்து அமைச்சரான சேக்கிழார்குடியில் வந்த பொருத்தம் ஒன்று உண்டு, என்றாலும் அந்த குடிப்பெருமையில் நல்ல மாணவராக விளங்கி சட்ட மேதை நெல்லை காசு பிள்ளையின் மாணவராகவும் திகழ்ந்தவர். தாய் மாமன் சி. என். முத்துரங்க முதலியாரின் பயிற்சி பட்டறை மூலம் பண்பட்டவராகவும், தனது மனைவியின் தந்தை தஞ்சை டி.வி கோபாலசாமி முதலியாரின் அன்பும் அக்கரையும் கொண்டு சுதந்திர போராட்டங்களில் ஈடுபட வைத்தது.

பக்தவத்சலம் தனது பள்ளி பருவத்தலேயே நாட்டை பற்றியே சிந்திப்பார் 1919ல் வருட ரௌலட் சட்டத்திற்கு எதிரான ஊர்வலத்தில் கலந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கம், தனி நபர் சத்தியாகிரகம் ஆகியவற்றிலும் பங்கேற்றார். 1932ல் முதன் முறையாக தடையை மீறி சிறை சென்றார்.

1940ல் ஆரம்பமான தனிநபர் சத்தியாகிரத்தில் சென்னை அருகே உள்ள கலந்துக் கொண்டு ஒன்பது மாதம் சிறையில் இருந்தார்.

1942 ஆகஸ்ட் 9 ல் மும்பையில் கூடிய அகில இந்தியக் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் காமராஜ் முத்துரங்க முதலியார் சத்தியமூர்த்தி ஆகியோரும் பங்கேற்றனர்.

"வெள்ளையனே வெளியேறு", "செய் அல்லது செத்து மடி' என்று தீர்மானம் போட்டு செயல்படுத்த மும்பையிலிருந்து சென்னை வந்தபோது பக்தவத்சலமும் முத்துரங்கமுதலியாரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே 1921-லிருந்து 1937 வரை சென்னை ராஜதானியை ஆண்ட நீதிக்கட்சி தேர்தலில் தோற்று விட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

ராஜாஜி அமைச்சரவையில் உள்ளாட்சித்துறை அமைச்சரான கோபால் ரெட்டியின் பார்லி மெண்டரி செயலாளராக பொறுப்பு ஏற்றார். அப்போது இவருக்கு வயது நாற்பது. அரசியலிருந்து ஆட்சி பணிக்கு வந்த முதல் படி இது 1946 - பிரகாசம் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை பெருநீர் பாசனம் நெடுஞ்சாலைதுறை ஆகியவை பக்தவத்சலமிடம் கொடுக்கப்பட்டது. அப்போது கீழ் பர்வானி அணைக்கட்டுவதற்கு பெரும் முயற்சி செய்தார்.

பிரகாசம் மந்திரிசபைக்கு நெருக்கடி வந்தபோது அடுத்த முதலமைச்சராக வரவேண்டிய நிலையிலிருந்தவர் பக்தவத்சலம், வல்லபாய் பட்டேலிருந்து காமராஜ் வரைக்கும் இவருக்கு ஆதரவு இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஓமத்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வர் ஆனார். அவரது அமைச்சரவையிலும் பொறுப்புள்ள துறைகளை ஏற்று ஆட்சி நடத்தி வந்தார். நாடு சுதந்தரம் பெறுகின்ற போது ராமசாமி ரெட்டியார் முதல்வராக இருந்தார். அவருக்கு பின்பும் பக்தவத்சலம் முதமைச்சர் ஆவார் என்று எதிர் பார்த்த போது ராமசாமி ரெட்டியார், குமாரசாமிராஜாயை முதல்வராக்கிவிட்டார். அப்போதும் பல்வேறு துறைகளில் பொறுப்பு ஏற்று நல்ல நிர்வாகத்தை தந்தார்.

1952 முதல் பொதுத் தேர்தலுக்கு பின்பு ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்டது. பக்தவத்சலம் இல்லாமல் மந்திரிசபையில்லை என்கின்ற நிலை வந்து மேல்சபை உறுப்பினராகி ராஜாஜி மந்திரி சபையில் சேர்க்கப்பட்டார். 1954 ஏப்ரல் 13ல் காமராஜ் முதல்வர் ஆனவுடன் பக்தவத்சலம் சிறப்பாக பணியாற்றினர். 1963ல் காமராஜ் அகில இந்திய காங்கிரஸ் தலைவரனவுடன் 02.10.1963ல் பக்தவத்சலம் முதல்வர் ஆனார்.

தமிழக அமைச்சவையிலேயே நீண்ட அனுபவமும் சிறந்த நிர்வாக கட்டமைப்பும் நேர்மையான ஆட்சியும் நடந்து வந்தது என்பதை இப்போதுள்ள அரசியல் வாதிகளும், மக்களும் உணர்ந்து உள்ளார்கள் என்பது தெரிகிறது. இவரது ஆட்சி நிர்வாக திறனால் ஏற்பட்ட நன்மைகள் மக்களுடைய அடிப்படை வாழ்வாதரமான விவசாய தொழிலை பெருக்கிட 1946ல் கீழ் பவானித்திட்டம், 1950 நவம்பர் 20 ல் மணிமுத்தாறு நீர்தேக்கத்திட்டம், 1951 சூலை 23ல் ஆரணியாற்றுத்திட்டம், 1949ல் மேட்டூர் கால்வாய் திட்டம், இவரது ஆட்சிக் காலத்தில் 1952 ம் ஆண்டுவரை சுமார் 1528 பாசனதிட்டங்கள் உருவாக்கப்பட்டன.

ஒரு கோடி ரூபாயில் மெய்யாற்று மின் திட்டம், பைக்கார மின் திட்டம், பாபநாசம் மின் திட்டம், சென்னை நகர மின் தேவைக்கு பெசின்பிரிஜ் மின் உற்பத்தி நிலையம், சாலைகள் ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் ஏணிப்படிகள். அதனால் 1946ஆம் ஆண்டு எல்லாச் சாலைகளையும் அவற்றின் மேம்பாட்டிற்கும் அதன் செயல்பாட்டிற்கும் தனியாக நெடுஞ்சாலை துறை ஒன்று அமைக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டில் 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாறிலத்தில் மொத்தம் 2,12,516 மைல்கல் சாலை இருந்தன. இன்றைய பஞ்சாயத்து யூனியன்கள் அன்று வட்டார வளர்ச்சி அலவலகமாக தொடங்க முன்நின்று உழைத்தவர்.

இவர் இந்து சமய அறத்துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து போதுதான் தமிழக திருக்கோயில் சீர் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சிதிலமடைந்த திருக்கோயில்கள் அழகுபடுத்தப்பட்டது. அறநிலைத்துறை கல்வி சாலையாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. எடுத்துக்காட்டாக பெண்கல்விக்கு செயல் வடிவம் கொடுத்தார்,

நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பெயரில் பாளையங்கோட்டையில் பெண்கள் உயர்நிலையப்பள்ளியும், குற்றாலத்தில் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியும், பழனியில் புராதன கலாச்சார கல்லூரி கலைக்கல்லூரி, தமிழ் வித்துவான் பயிற்சி பெற தமிழ் கல்லூரி, காவேரி பூம்பட்டினத்தில் புராதான கலாச்சாரக் கல்லூரி ஒவ்வொரு ஆண்டும் திருப்பாவை – திருவெம்பாவை மாநாடுகள் நடத்தினார்.

தமிழக திருக்கோவில்கள் நிர்வாகம் மிக சிறப்பாக இருப்பதற்காக சர்.சி.வி.ராமசாமி அய்யர் தலைமையில் ஒரு கமிஷன் நியமித்து நிர்வாகத்தை சீர் செய்தார். திருக்கோயில்களில் குருகளுக்கு சைவ ஆமக போதனை ஏழு மாதங்களுக்கு, அர்ச்சகர்களுக்கு குருக்களுக்குரிய சைவ-வைஷ்ணவ ஆகமப் பயிற்சி வகுப்புகள், பாஞ்சராத்திர ஆகமப் பயிற்சி வகுப்புகள், வைகாசை ஆகமப் பயிற்சி வகுப்பு, சைவ ஆகமப் பயிற்சி வகுப்பு தொடர்ந்து நடைப்பெற்றது. இவைகள் சிறப்பாக நடக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

ஆகமம் கல்விதுணைக்கமிட்டி

சீர்திருத்த துணைக்கமிட்டி

மதக் கோட்பாடுகள் பிரசாரக்கமிட்டி

ஆகியவை அமைத்து வழிபாட்டு தலங்களை மேம்படுத்தினார்.

கல்வி அமைச்சராயிருந்து போது தமிழை பயிற்று மொழியாகவும் கல்லூரியில் தமிழை பயிற்று மொழியை கல்வி கற்க புதுமுக வகுப்பில் (PUC) நடைமுறைக்கு கொண்டு வந்தார். இன்றைய தமிழக முன்னேற்றத்திற்கு அடிப்படை வித்தாக ஆனிவேராகயிருந்து செயல்பட்டவர் பக்தவத்சலம் ஆவார்.

ஒவ்வொரு துறையிலும் இவர் செய்த பணியை பாராட்டிய பெரியவர்கள் பலர். ஆனாலும் 1967 பொதுத்தேர்தலில் இந்திஎதிர்ப்பு போராட்டம் - அதற்கு ஏற்பட்ட அடக்குமுறை, பஞ்சம், விலைவாசி ஏற்றம் ஆட்சி மாற்றம், எம்.ஜி.ஆர் துப்பாக்கி சூடு இவைகளின் காரணமாக காங்கிரஸ் தோற்றது. அப்போதுள்ள சூழ்நிலையில் மக்களின் மனநிலையில் இவரது நிர்வாக மேன்மையை மக்கள் அறியாமல் விட்டனர்.

ஆனால் 1969ம் வருடத்தில் சென்னை அரசினர் அச்சக விழாவொன்றில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி பேசுகையில், பார்லிமெண்டரி விவகாரங்களில் பக்தவத்சலத்திடம் இருந்து தான் நிறைய கற்றுக்கொண்டதாக கூறினார். "துரோணரிடமிருந்து ஏகலைவன் கற்றுக் கொண்டதை போல பக்தவத்சலம் அவர்களிடமிருந்து நான் பயின்றேன். என்று முதல்வர் கருணாநிதி சொன்னார்.

1967 தேர்தல் காலங்களில் இவரை பத்து இலட்சம் பக்தவத்சலம் என்று கூறி பிரச்சாரம் செய்தது தவறு என்பதை உணர்ந்தார் எம்ஜிஆர். அதனால் 1977ல் அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இவரது பிறந்த நாள் விழாவில் பத்து இலட்சம் பரிசாக வழங்கினார். அந்த பணப்பரிசை மேடையில் பெற்றுக் கொண்ட பக்தவத்சலம் அப்போதே அதை ஒரு கல்லூரிக்கு நன் கொடையாக கொடுத்துவிட்டார்.

இன்றைய ஆட்சியில் இருப்பவர்கள், பக்தவத்சலம் ஆட்சி செய்த 21 ஆண்டுகளில், அவரது நிர்வாக திறனையும் ஆளுமை திறனையும் தெரிந்து கொள்ள வேண்டும். பக்தவத்சலம் பூர்வீக சொத்தாக மீஞ்சுரில் 100 ஏக்கர் இடம் உண்டு. ஒவ்வொரு தேர்தலுக்கும் பத்து ஏக்கர் விற்று தேர்தல் செலவு செய்தார். கடைசியாக மீதி உள்ள நிலத்தை விற்று மைலாப்பூர் வாரன் தெருவில் ஒரு வீடு வாங்கினார். இன்றைய தலைமுறையினர் பக்தவத்சலத்தை முழுமையாக படித்தால் சமுதாயத்திலும், அரசியலிலும் நல்ல மாற்றங்கள் நிகழும்.

Updated On: 9 Oct 2021 4:47 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!