/* */

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாநகராட்சி அலுவலர்- பணியாளர்களுக்கு பரிசு

திருநெல்வேலி புத்துணர்வு விளையாட்டுப் போட்டியில் வென்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் கேடயம் வழங்கினார்

HIGHLIGHTS

விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாநகராட்சி அலுவலர்- பணியாளர்களுக்கு பரிசு
X

பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் கேடயம் வழங்கி பாராட்டினார்

திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புத்துணர்வு பெறும் வகையில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் கேடயம் வழங்கி பாராட்டினார்.

திருநெல்வேலி மாநகராட்சியில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் புத்துணர்வு பெறும் வகையில் 2 தினங்கள் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டியில் நிறைவு நாளான இன்றும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு திடல் உள்விளையாட்டு அரங்கில் மாநகராட்சியில் பணிபுரியும் மகளிர்கள் கலந்து கொண்ட இறகு பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

அதை தொடர்ந்து பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இறுதி கட்ட கிரிக்கெட் போட்டியினை மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் துவக்கி வைத்தார்.இப்போட்டியில் தச்சநல்லூர் மண்டலம் மற்றும் திருநெல்வேலி மண்டலம் போட்டியிட்டது. இதில் தச்சநல்லூர் மண்டலம் வெற்றி பெற்றது. கிரிக்கெட் போட்டி மற்றும் பல்வேறு விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.விஷ்ணுசந்திரன்- துணைவியாரும், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளருமான ஆஷா அஜித் ஆகியோர் இணைந்து கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாநகர பொறியாளர் (பொ) என்.நாராயணன், உதவி ஆணையாளர்கள் அய்யப்பன், ஜகாங்கீர்பாஷா, வெங்கட்ராமன், சொர்ணலதா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 3 March 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!