/* */

அரசுப் பொருட்காட்சி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை துவக்கம்

அரசுப் பொருட்காட்சி விரைவில் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் துவங்கி வைத்தார்கள்.

HIGHLIGHTS

அரசுப் பொருட்காட்சி அமைக்கும் பணிக்கான பூமி பூஜை துவக்கம்
X

அரசுப் பொருட்காட்சி விரைவில் துவங்கப்படவுள்ளதை முன்னிட்டு அரங்கம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி துணை மேயர் ராஜூ ஆகியோர் துவங்கி வைத்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசுப் பொருட்காட்சி வருடந்தோரும் நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக அரசுப் பொருட்காட்சி நடைபெறவில்லை. இந்தாண்டு அரசுப் பொருட்காட்சி நடத்துவதற்கான பூமி பூஜை துவங்கப்பட்டது.

மேலும் அரசுப் பொருட்காட்சிகளில் பொதுமக்களின் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும் செயல் முறை விளக்கம் அளிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கும் பணிகள், நடைபெறவுள்ளது.

அரசுப் பொருட்காட்சியில், செய்தித்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நீர்வளத்துறை, சுற்றுலாத் துறை, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலான்மைத்துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித்துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும்.கதர் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, போக்குவரத்து துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சுற்றுச்சூழல் துறை, பேரூராட்சிகள், நகராட்சிகள், தொழிலாளர் நலன் மற்றும்.திறன்மேம்பாட்டுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மீன்வளத்துறை, ஆவின், தாட்கோ, மாசுகட்டுப்பாட்டு வாரியம், மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு எரிசக்தி நிறுவனம் உள்பட பல்வேறு அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.

அரங்குகளில் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளக்கப்படங்கள், மாதிரிகள், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த புகைப்படங்கள் அமைக்கப்படவுள்ளது.

மேலும், பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அரசுப்பொருட்காட்சி ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டு 45 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தச்சை மண்டல தலைவர் பி.ரேவதிபிரபு, நெல்லை மண்டல தலைவர்.எஸ்.மகேஸ்வரி, கவுன்சிலர்கள் கந்தன், சுப்பிரமணியன், மன்சூர், அல்லாப்பிச்சை, மாரியப்பன், உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

.

Updated On: 28 July 2022 2:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...