/* */

வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள்- காதி கிராப்ட் சார்பில் பொது சேவை மையம்

திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக,காதி கிராப்ட் சார்பில், பொது சேவை மையத்தினை ஆட்சியர் திறந்து வைத்தார்

HIGHLIGHTS

வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள்- காதி கிராப்ட் சார்பில் பொது சேவை மையம்
X

காதி கிராப்ட், பொது சேவை மையம்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக, களக்காடு பத்மநேரி பகுதியில், காதி கிராப்ட் சார்பில், பொது சேவை மையத்தினை, இன்று (29-07-2021) திறந்து வைத்தார்.. நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பத்மநேரி பகுதிதயில் வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக, காதி கிராப்ட் சார்பில், பொது சேவை மைய கட்டிடம், இன்று திறந்து வைக்கப்பட்டது. தற்போது களக்காடு பகுதிகளில் அதிக அளவிலான வாழை பயிரிடப்பட்டு பெருமளவிலான வாழைப்பழங்கள் விளைவிக்கப்பட்டு

வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் வாழை பயிரிடுவதற்கு தகுந்த இடமாக களக்காடு பகுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் இரண்டாவதாக அதிகளவில் வாழைநார் மூலம் கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படும் இடமாகவும் களக்காடு பகுதி உள்ளது. அம்பாசமுத்திரம் வாகைகுளத்தில் குத்துவிளக்கும், களக்காட்டில் பைபரும்,காருக்குறிச்சியில் மண்பாண்டம், போன்ற சிறப்பான பொருட்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரையில் திறமையான அதிகாரிகள் அதிகளவில் உள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தி பொருட்களும், சிறப்பான சாலைவசதிகள், பக்கத்து மாவட்டமான

தூத்துக்குடியில் துறைமுகமும் மற்றும் மதுரை, பெங்களுர், உட்பட அனைத்துபகுதிகளையும் இணைக்கும் தரமான சாலைப்போக்குவரத்து வசதிகள் உள்ளது. கைவினைப்பொருட்கள் தொடர்பான உலகத்தரமான வடிவமைப்பாளர்கள் சென்னை, பெங்களுர், மும்பை, போன்ற மாநகரங்களில் உள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில்

எல்லா சேவைகளும் இணைய வழியாகவே நடைபெற்றுவருகிறது. எனவே, இவர்களை இணையவழியாக தொடர்பு கொண்டு நமக்கு தேவையான மூலப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து வரவழைத்துக் கொள்ளலாம். மாவட்ட நிர்வாகம், மாவட்ட கைவினை மைய அமைப்பு, மற்றும் மகளிர் அமைப்பு, மூலம் கைவினை பொருட்களை சந்தைப்படுத்துதல் மூலமாக இங்கு இருக்கின்ற அனைத்து பொருட்களையும் தரம் ஆய்வு செய்து அனுப்ப முடியும்.

சந்தைகளில் அதன் தரம் முக்கியமானது. தரம் என்று சொல்லும் போது அதில் பல்வேறு விஷயங்கள் வருகிறது.அதில் சுற்றுசூழல் பாதிப்பு, வடிவமைப்பு தரநிலை, சகிப்பு தன்மை தரத்தை போன்றவற்றை பார்க்க வேண்டும். இவை அனைத்தும் முக்கியமானது. கைவினைப்பொருட்கள் திருநெல்வேலியிலோ, தூத்துக்குடியிலோ சந்தைப்படுத்துவதில்லை. ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தான் இந்த பொருட்களுக்கான சந்தைகள் உள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் இதனை செயல்படுத்தி வருகிறார்கள். நாம் எவ்வாறு அவர்களுடன் இணைந்து கைவினைப்பொருட்களை சந்தைப்படுத்த முடியுமோ,

அப்பொழுதுதான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அதற்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு தயாராக உள்ளது. இதற்கான பணியாளர்கள் தயார்படுத்தப்பட்டுள்ளார்கள். மாவட்ட நிர்வாகம், கேவிசி தனியார் நிறுவனங்கள், கைவினை கலைஞர்கள் அனைவரும் இணைந்து உற்பத்தி செய்யப்படும் கைவினை பொருட்களை உலக தரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

நெல்லை கைவினை மையம் மூலம் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நாம் உற்பத்தி செய்யும் பொருட்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு ஏற்றுமதி செய்வதற்கு மாவட்ட நிர்வாகம், கேவிசி நிறுவனம் முயற்சி செய்கிறது. களக்காடு மார்க்கெட் இந்தியா மட்டுமல்லாது உலகளவில் புகழ் பெற்ற பொருட்களாக மாற்ற முழு ஒத்துழைப்பு தமிழ்நாடு

அரசு சார்பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் மேற்கொள்ளப்படும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் காதி கிராம தொழில் மைய தென்மண்டல உறுப்பினர். சேகர்ராவ்பிரேலா, தென்மண்டல கதர் கிராம தொழில் மைய துணை தலைமை நிர்வாக பொறியாளர் ஆர்.எஸ்.பாண்டே, கோட்ட இயக்குநர் ஆர்.பி.அசோகன், நிகழ்ச்சி இயக்குநர் சுசிலாபாண்டியன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 29 July 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!