/* */

நெல்லையில் தீபாவளியையொட்டி மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு

நெல்லையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும்-மாநகர ஆணையாளர்

HIGHLIGHTS

நெல்லையில் தீபாவளியையொட்டி மக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு
X

நெல்லையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் கூடும் இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லை மாநகர பகுதிகளில் மக்கள் கூடும் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து திருடர்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரை கண்ணன் பேட்டியில் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூடும் இடங்களில் திருடர்களை கண்காணிப்பதற்காக உயர் கோபுரம் அமைத்து காவலர்கள் மூலம் திருடர்களை கண்காணிப்பார்கள் என நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் தாமரைக்கண்ணன் தெரிவித்தார்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஆதரவற்ற இல்லங்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் கலந்துகொண்டு ஆதரவற்ற இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையர் செந்தாமரைக்கண்ணன் நிருபருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும்போது:-

நெல்லை மாநகர பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் திருடர்களை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது மாநகரப் பகுதி முழுவதுமே சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கும், திருடர்களை கண்காணிப்பதற்கும் சிறப்பு தனிப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் நெல்லை மாநகர பகுதிகளில் பாளையங்கோட்டை ,டவுன் மற்றும் மேலப்பாளையம் ஆகிய மார்க்கெட் பகுதிகளில் திருடர்களை கண்காணிப்பதற்காக உயர் கோபுரம் அமைத்து அதன்மூலம் காவலர்கள் அதில் அமர்ந்து கண்காணிப்பார்கள். தமிழக அரசு என்ன விதிமுறைகளை வகுத்துள்ளது. அதற்கு ஏற்ப கடைகளை திறந்து வியாபாரிகள் வியாபாரம் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 25 Oct 2021 2:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...