/* */

பாஜக சட்டமன்ற அலுவலகம் திறப்பு: மத்திய இணை அமைச்சர், மாநிலத் தலைவர் பங்கேற்பு

நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜக சட்டமன்ற அலுவலகத்தை இணை அமைச்சர் முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தனர்.

HIGHLIGHTS

பாஜக சட்டமன்ற அலுவலகம் திறப்பு: மத்திய இணை அமைச்சர், மாநிலத் தலைவர் பங்கேற்பு
X

நெல்லை சட்டமன்ற தொகுதியில் பாஜக சட்டமன்ற அலுவலகத்தை இணை அமைச்சர் முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியாேர் திறந்து வைத்தனர்.

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் பாரதி ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நாகேந்திரன் சட்டமன்ற அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:-

மீன் வள மசோதா 2021 சரத்துகளை மக்களிடம் எடுத்துரைப்போம். மக்களின் கருத்துகளைக் கேட்ட பின்பு தான் மசோதா நிறைவேற்றப்படும். பாராம்பரிய மீனவர்களுக்கான மீன் பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். தற்போது உள்ள தமிழக அரசின் மீன்பிடி சட்டத்தில் அனுமதி இல்லாமல் 12 கடல் மைல் மீன் பிடிக்கும் மீனவர்களின் மீன்கள் பறிமுதல் செய்வதோடு, 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் மத்திய அரசின் மீன்வள மசோதாவில் ஆயிரம் ரூபாய் தான் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டு மீனவர்களின் நலன்கள் பாதுகாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீன்வள மசோதாவை பற்றி பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. 12 முதல் 200 கடல் மைல் தொலைவிலுள்ள இடத்தில் வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களின் விசைப்படகுகளில் விசைத்திறன் அதிகரிக்கப்பட்டு அப்பகுதியில் மீன் பிடிக்க வழிவகை செய்யப்படும். மத்திய அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் மீனவர்களின் நலனுக்காக ஒதுக்கியுள்ளது. மீன்பிடி விசைப் படகுகளுக்கு 80% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கடற்பாசி மேம்படுத்துவதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கான விசைப் படகுகளின் கட்டுமான நிறுவனம் கொச்சியில் உள்ளது போல், தமிழகத்தில் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில்:- உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக உடன் கூட்டணி தொடரும், கூட்டணியில் எந்தவித குழப்பமும் இல்லை என்றார். தற்போது உள்ள திமுகவின் 100 நாள் ஆட்சி பற்றி கொஞ்சம் இனிப்பு, அதிக கசப்பு அதைவிட அதிக காரம் என தெரிவித்தார்.

Updated On: 20 Aug 2021 10:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!