நெல்லையில் அதிமுகவின் 50ம் ஆண்டு பொன் விழா: கட்சியினருக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு

நெல்லையில் அதிமுக கழகத்தின் 50வது ஆண்டு பொன்விழா வருகின்ற 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லையில் அதிமுகவின் 50ம் ஆண்டு பொன் விழா: கட்சியினருக்கு மாவட்ட செயலாளர் அழைப்பு
X

நெல்லை அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா.

நெல்லையில் அதிமுக வின் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அழைப்பு.

இதுகுறித்து நெல்லை மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவரும், அதிமுக மாவட்ட செயலாளருமான தச்சை-கணேசராஜா தெரிவித்ததாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் போற்றி வளர்க்கப்பட்டு பல்வேறு வகையிலும் சாதனைகள் படைத்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வருகின்ற 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் கழக ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க திருநெல்வேலி மாவட்ட கழகத்தின் சார்பில் 17.10.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கொக்கிரகுளத்திலுள்ள புரட்சித் தலைவர் முழுதிருவுருவ சிலைக்கும், அலங்கரிக்கப்ட்ட புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கும் மலர்மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். மேலும் நிகழ்ச்சியில் பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, மற்றும் கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இதேபோல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு மற்றும் கிளை கழகங்களில் அலங்கரித்து வைக்கப்பட்ட புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலையிட்டும், கழக கொடியேற்றியும் கழகத்தின் பொன்விழா ஆண்டை சிறப்பாக கொண்டாடுமாறு மாவட்ட கழகத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Updated On: 15 Oct 2021 11:31 AM GMT

Related News