நெல்லை அருகே கொலை வழக்கில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கூத்தங்குழியில் கொலையில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை அருகே கொலை வழக்கில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X

பைல் படம்.

நெல்லை மாவட்டம் கூத்தங்குழி அருகே கொலையில் ஈடுபட்ட 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில் கொலை வழக்குகளில் குற்றவாளியான இராதாபுரம் வட்டம் கூத்தங்குழி, சுண்டாங்காடை சேர்ந்த சந்தகுரூஸ் என்பவரின் மகன் சிலுவை அருள் சந்துரு(19), ஜெய ஆரோக்கிய செல்வன் என்பவரின் மகன் பிரதீஸ் என்ற சஞ்சய் பிரதீஸ்(19), கூத்தங்குழி, பாத்திமா நகரை சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் டென்னிஸ் என்ற சிலுவைமிக்கேல் டென்னிஸ்(21), அதே பகுதியை சேர்ந்த சூசைசந்தியாகு என்பவரின் மகன் வினிஸ்டர் என்ற அன்றன் சேவியர் வினிஸ்டர்(30), கூத்தங்குழி சுனாமி காலனியை சேர்ந்த சிலுவை அலங்காரம் என்பவரின் மகன் இருதய யோவான்(38), ஆகியோர் கொலை வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.

குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடங்குளம் வட்ட காவல் ஆய்வாளர் ஜான் பிரிட்டோக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், குற்றவாளிகள் ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Updated On: 16 Sep 2021 5:02 PM GMT

Related News