/* */

கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

கொக்கிரகுளம் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கடும் குடிநீர் பற்றாக்குறை; காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
X

கொக்கிரகுளம் பகுதியில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உற்பத்தியாகி தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து திருநெல்வேலி மாநகர் பகுதி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.

ஆனால் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளில் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இப்பிரச்சனை குறித்து பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி மேலப்பாளையம் சாலையை மறித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எனினும் மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீர் கிடைப்பதை உறுதி அளித்தால் மட்டுமே தங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் போராட்டத்தை அடுத்து அவசர, அவசரமாக மாநகராட்சி லாரி மூலம் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

லாரி மூலம் குடிநீர் விநியோகம் என்பது மிகக் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே கிடைக்கும் என்பதால் குழாய்களில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒரு மணி நேரம் ஆகியும் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

Updated On: 30 Aug 2021 9:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!