/* */

முக்கூடல் அருகே குழந்தை விற்பனை: பணத் தகராறில் அம்பலமானது

முக்கூடல் பகுதியில் குழந்தைகளை விற்று பணம் பெற்றதில் மூன்று பேருக்கு தகராறு ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு

HIGHLIGHTS

முக்கூடல் அருகே குழந்தை விற்பனை: பணத் தகராறில் அம்பலமானது
X

மையிலப்புரம் 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள மையிலப்புரம் மேட்டு தெருவில் திருப்பூரைச் சேர்ந்த தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா ஆகியோருடன் சேர்ந்து 6 மாதத்திற்கு முன்பு தேவி தனது மகள் தர்ஷனாவை (வயது 2) ஜான் எட்வர்ட் - அற்புதம் என்ற தம்பதியிடம் விற்பனை செய்துள்ளனர்.

இந்த நிலையில், தேவி இரண்டு மாதமே ஆன தனது இரண்டாவது குழந்தையை விற்பனை செய்வதற்காக தென்காசியை சேர்ந்த அமலா பாத்திமா மற்றும் ஜெபஸ்டின் ஆகியோருடன் பேரம் பேசியுள்ளனர். அப்போது தேவி, வியாகமால், மார்க்ரெட் தீபா இவர்கள் மூவருக்கும் பணம் பிரிப்பது சம்பந்தமாக பிரச்சனை ஏற்படவே குழந்தைகள் விற்பனை செய்த விஷயம் அம்பலமாக தொடங்கியது. இந்த விஷயம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைக்கவே முக்கூடல் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் தேவியிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குழந்தை விற்பனை செய்தது உறுதியானது. தர்ஷனா என்ற 2 வயது குழந்தையை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து முக்கூடல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 26 Aug 2021 9:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  9. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  10. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...