/* */

20-ம்தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. முடிவு

20-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

20-ம்தேதி ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்க திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. முடிவு
X
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு க. செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடந்தது.

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில், மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வருகின்ற 20-ஆம் தேதியன்று, பெட்ரோல் விலை, எரிவாயு சிலிண்டர் விலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கல் போன்ற மக்கள் விரோத செயல்களில் மத்திய அரசை ஈடுபடுவதை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருச்சி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

அதே போல பொதுமக்களை தங்களின் இல்லங்களில் ஆங்காங்கே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செய்து பெரும் திரள் ஆர்ப்பாட்டமாக நடைபெற செய்ய வேண்டும். மக்களிடையே இத்தகைய கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்து தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்டளையை தன் கடமையாக ஏற்று, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கே.என்.சேகரன், கோவிந்தராஜன், வண்ணை அரங்கநாதன்,செந்தில், கவிஞர் சல்மா, மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், சபியுல்லா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  6. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  7. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  9. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!