/* */

திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
X
திருச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 01.01.2023-ஐத் தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் நடை பெற்று வருகிறது. 2023 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 09.11.2022 முதல் 08.12.2022 வரை நடைபெறவுள்ளது. இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று 09.11.2022 வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இதனை வெளியிட்டார்.

வாக்காளர் பட்டியல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் , வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள், கிராம , நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி மையங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டவுள்ளது.

இதன் மூலம் பொது மக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும், இதன் தொடா;சியாக திருச்சி மாவட்டத்தில் 12.11.2022 (சனி), 13.11.2022 (ஞாயிறு) ஆகிய தேதிகளிலும் மேலும் 26.11.2022 (சனி) மற்றும் 27.11.2022 (ஞாயிறு) ஆகிய தேதிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. 01.01.2023 அன்று 18 வயது நிரம்பியவர்கள் (அதாவது, 31.12.2004 அல்லது அதற்கு முன்னா; பிறந்தவர்கள்) சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வயது மற்றும் இருப்பிடத்திற்குரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து, புதியதாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். அயல்நாடு வாழ் இந்திய வாக்காளர்கள் படிவம் 6ஏ-இல் நேரடியாக இணைய வழியில் வாக்காளர் பதிவு அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் வாக்காளரது பெயரினை நீக்கம் செய்திட படிவம்-7-யும், வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய வேண்டியிருப்பின் படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விண்ணப்பங்கள் 09.11.2022 முதல் 08.12.2022 வரை அனைத்து வேலை நாட்களிலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், (சிறப்பு முகாம் நடைபெறும் நாட்கள் உட்பட) வாக்காளர் பதிவு அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் வட்டாட்சியர் அலுவலகங்களில் ய படிவத்தில் விண்ணப்பங்களை அளிக்கலாம். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிக்குட்பட்டவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம் எனவும், மேலும் நாளது தேதிவரை தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்காத வாக்காளர்கள் மேற்படி சிறப்பு முகாhம் நடைபெறும் நாள் அன்று சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலரிடமும் படிவம்-6பி-யில் விண்ணப்பித்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக்கொள்ளலாம்.

மேலும், 12.11.2022, 13.11.2022 ஆகிய தேதிகளிலும் மற்றும் 26.11.2022 27.11.2022 ஆகிய தேதிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள வாக்காளர்கள் wwwnsvpin என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பாக சந்தேகங்கள் ஏதும் இருப்பின் பொதுமக்கள் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி வழி தகவல் பெற்றுக்கொள்ளலாம். எனவே 2023-ஆம் ஆண்டிற்குரிய சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின்போது தகுதியான வாக்காளர்கள் தங்களது பெயர்களை வாக்காளர்பட்டியலில் சேர்த்துக் கொள்ள விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தவராது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் திருச்சி மன்னார்புரம் சந்திப்பிலிருந்து தந்தை பெரியார் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரை கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நடை பயண நிகழ்வை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வைத்தியநாதன், தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Nov 2022 1:48 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்