/* */

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு
X

திருச்சி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பாராளுமன்ற தேர்தல், 2024 - ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது குலுக்கல் முறை மாவட்ட தோ;தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்மற்றும் பொதுப்பார்வையாளர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் 01.04.2024 அன்று தேர்வு செய்யப்பட்டு, அவர்ளுக்கு கீழ்கண்டுள்ள விபரப்படி சட்டமன்ற தொகுதிவாரியாக பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, இன்று 07.04.2024 அனைத்து சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நடைபெறவுள்ளது.

வ.எண்: ,சட்டமன்ற தொகுதி எண் மற்றும் பெயர் ,பயிற்சி மையங்கள் விபரம் பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை கீழே தரப்பட்டு உள்ளது.

138.மணப்பாறை லெட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி, கோவில்பட்டி, மணப்பாறை. 1583

139.ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஸ்ரீரங்கம். ௧௬௯௫

140.திருச்சிராப்பள்ளி (மேற்கு) பிஷப் ஹீபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புத்தூர் 1374

141.திருச்சிராப்பள்ளி (கிழக்கு) ஹோலிகிராஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருச்சிராப்பள்ளி. 1310

142.திருவெறும்பூர் மான்ட்போர்ட் பள்ளி, காட்டூh; 1475

143.இலால்குடி நெஸ்ட் மெட்ரிக்குலேஷன் பள்ளி, அகிலாண்டேஸ்வரி நகர் இலால்குடி. 1229

144.மணச்சநல்லூர் அரசு பெண்கள் மேலா;நிலைப்பள்ளி, மணச்சநல்லூர் 1364

145.முசிறி கொங்குநாடு பொறியியல் கல்லூரி தொட்டியம். 1274

146.துறையூர்(தனி) சௌடாம்பிகா மெட்ரிக்குலேஷன் பள்ளி, துறையூர் 1352

கூடுதல் 12656

அதனடிப்படையில் திருச்சிராப்பள்ளி புத்தூர் பிஷப் ஹீபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் திருவெறும்பூர் காட்டூர் மான்ட்போர்ட் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (07.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை, படிவங்களை கையாளும் முறைகள் தொடர்பான செயல்முறை விளக்கம் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

மேற்கண்டுள்ள பயிற்சியின் போது வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர் வாக்குப்பதிவு நாளன்று மற்றும் வாக்குப்பதிவு முடிவுற்ற பின்னர் பல கட்டங்களில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மேலும் வாக்குப்பதிவு அலுவலர் - 1, வாக்குப்பதிவு அலுவலர்2 மற்றும் வாக்குப்பதிவு அலுவலர் 3 ஆகியோர் வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.

மேலும் மேற்கண்டுள்ள பயிற்சியின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தும் முறை தொடா;பான செயல்முறை விளக்கம், பாராளுமன்ற தேர்தல், 2024 இல் பயன்படுத்தப்படும் படிவங்களை கையாளும் முறைகள், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மண்டல அலுவலரிடம் நேரடியாக ஒப்படைக்கப்பட வேண்டிய முக்கிய உறைகள் தொடர்பான விளக்கம் மற்றும் தேர்தல் சமயத்தில் வாக்குச்சாவடி மையத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இது தவிர வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அஞ்சல் வாக்கினை பதிவு செய்து மேற்படி பயிற்சி மையங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டுள்ள உதவி மையத்தில் வாக்குகளை செலுத்திட தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்டுள்ள பயிற்சிக்கு தேவையான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் ஆகியவை தொடா;பான முன்னேற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 7 April 2024 1:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை