/* */

திருச்சி மாநகராட்சியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

திருச்சி மாநகராட்சியில் நடந்த குடியரசு தினவிழாவில் மேயர் அன்பழகன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

திருச்சி மாநகராட்சியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்
X

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தேசிய கொடி ஏற்றினார்.

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் மு. அன்பழகன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி வைத்து ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று நமது நாட்டின் ௭௪வது குடியரசு தினவிழா மிக சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மேயர் மு. அன்பழகன் ,மாநகராட்சி ஆணையர் மரு. இரா.வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மாநகராட்சி சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சியில் மாசற்ற முறையில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்த 4 நபர்களுக்கு ரூ.2000 ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மேயர் அன்பழகன் வழங்கினார். இம்மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றி வரும் வார்டு குழு அலுவலகம், நகர் நல மையம் அலுவலர்கள் மற்றும், உதவிஆணையர், உதவி செயற்பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் , பணியாளர்கள் உள்ளிட்ட 16 நபர்களை கௌவுரவித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் சுழல் கேடயம் ஆகியவற்றையும் மேயர் மு. அன்பழகன் வழங்கி அரசு பொருட்காட்சியில் மாநகராட்சி சார்பாக சிறப்பான முறையில் காட்சியரங்கம் ஏற்படுத்தியமைக்கான இரண்டு நபர்களுக்கு விருது வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு மேயர் அன்பழகன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

விழாவில் எடமலைப்பட்டிபுதூர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கலை நிகழச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை மேயர் அன்பழகன் வழங்கினார்.

பின்னர் அரசு தலைமை மருத்துவமனை அருகில் உள்ள அண்ணல் காந்தியடிகள் அஸ்தி மண்டபத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய மேயர் மு. அன்பழகன் காந்திமார்கெட் போர் வீரர்கள் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி காந்தி சந்தை வளாகத்தில் உள்ள அண்ணல் காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மாநகராட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சிகளில் நகரப்பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் மணிவண்ணன், மண்டலத்தலைவர்கள் ஆண்டாள்ராம்குமார், மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெயநிர்மலா, செயற் பொறியாளர்கள் ஜி.குமரேசன், கே.பாலசுப்ரமணியன், துணைஆணையர் தயாநிதி, உதவிஆணையர்கள் பிரபாகரன், சண்முகம், ரவி,அக்பர்அலி, மீனாட்சி, இரா.சதீஸ்குமார் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள் ,மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

Updated On: 26 Jan 2023 6:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...