/* */

திருச்சி கல்மந்தையில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு மீது புகார்

திருச்சி கல்மந்தை பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

HIGHLIGHTS

திருச்சி கல்மந்தையில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு மீது புகார்
X

திருச்சி கல்மந்தை பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள தாராநல்லூர் கல்மந்தை காலனியில் கடந்த 2017-ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியில் குடிசை வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு, குடிசை மாற்று வாரியத்தின் கீழ் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி தொடங்கப்பட்டது.

அப்போது அங்கு வாழ்ந்து வந்த 237 குடும்பங்களுக்கும் வீடுகளை ஒதுக்கி கொடுப்பதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால் அந்த இடத்தில் 192 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. கல்மந்தை காலனி பகுதியில் தொடக்கத்தில் வாழ்ந்து வந்த 64 குடும்பத்தினரிடம் ஒரு வீட்டிற்கு 63 ஆயிரம் ரூபாய் கட்டணமாக பெற்றுக்கொண்டு, அவர்கள் மட்டும்குடியேறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அங்கு கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் தரமற்று இருப்பதாகவும் கையில் சுரண்டினாலே அதன் சுவர்கள் பெயர்ந்து வருவதாகவும், இதனால் அந்த கட்டிடங்கள் இடிந்து விழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அங்கு உடனடியாக மராமத்து பணிகள் செய்து வீடுகளை உரியவர்களுக்கு விரைவாக ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதியில் குடிசைப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி என்.ஐ.டி வல்லுனர் குழுவை கொண்டு அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அந்த குடியிருப்பு கட்டப்பட்ட நிலையில் அதை கட்டிய ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு குடியேற காத்திருக்கும் மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக குற்றச்சாட்டு எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருச்சியில் அதேபோல அ.தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 12 Dec 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!