/* */

திருச்சியில் 38 மாவட்ட தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் மையம்

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள 38 மாவட்ட தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் மையத்தில் பணிகளை ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் 38 மாவட்ட தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் மையம்
X

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள 38 மாவட்ட தபால் வாக்குகளை பிரித்து அனுப்பும் மையத்தில் ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல், 2024 - ஐ முன்னிட்டு மாவட்டங்களில் பெறப்பட்டுள்ள தபால் வாக்குகளை 38 மாவட்டங்களுக்கு எளிதாக கொண்டு சேர்க்கும் வகையில் திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (17.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பாராளுமன்ற தேர்தல், 2024 - ஐ முன்னிட்டு மாநிலம் முழுவதும் அஞ்சல் வாக்குகள் வழங்கப்பட்ட, தேர்தல் பணியாற்றும் அலுவலரகளிடமிருந்து பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய பாராளுமன்ற தொகுதிக்கு அனுப்புவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தேர்தல் அலுவலர்களால் பெறப்பட்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பிரித்து வழங்கிட பொதுவான சிறப்பு மையமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிட திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுவான சிறப்பு மையம் அமைத்திட உரிய ஏற்பாடுகள் திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் செய்யப்பட்டு, இந்த மையத்தில் இன்று (17.04.2024) அஞ்சல் வாக்குகள் பிரித்து வழங்கிடும் பணியினை பிரதீப் குமார் தோ;தல் நடத்தும் அலுவலர் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி மாவட்ட ஆட்சித்தலைவர் திருச்சிராப்பள்ளி அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் அஞ்சல் வாக்குகள் தொடர்பாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களால் அந்தந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகள், தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரின் தொடர்புடைய அலுவலர்களிடம் பிரித்து வழங்கப்பட்டது. பின்னர் 38 மாவட்ட அலுவலர்களும் இந்த மையத்தில் பெற்றுக்கொண்ட பதிவு செய்யப்பட்ட அஞ்சல் வாக்குகளை உரிய காவல்துறை பாதுகாப்புடன் தங்களது மாவட்டத்திற்கு எடுத்து செல்ல உள்ளனர்.

இந்த மையத்திற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பாக செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், அனைத்து மாவட்டத்திலிருந்தும் அஞ்சல் வாக்குகளை கவனிக்கும் தொடர்பு அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 17 April 2024 11:27 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!