/* */

திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி

திருச்சியில் நடந்த விபத்தில் அரசு பஸ் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலியானார்.

HIGHLIGHTS

திருச்சியில் அரசு பஸ்மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி
X

சாலை விபத்தில் இறந்த விஜயபிரபாகரன்.

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ராஜூ இவரது மகன் விஜயபிரபாகரன் (வயது 28). இவர் திருச்சி ஏர்போட்டில் ஒப்பந்த அடிப்படையில் முன்பு வேலை பார்த்து வந்ததாகவும் தற்போது வீட்டில் வேலை இல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயபிரபாகரன் நேற்று மாலை திருச்சி புதுக்கோட்டை சாலையில் பைக்கில் சென்றபோது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு புறநகர் பேருந்து எதிர்பாராத வகையில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே விஜயபிரபாகரன் மூளை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக அரசு பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விஜய பிரபாகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும், தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவரையும் தேடியும் வருகின்றனர்.

Updated On: 26 Jan 2022 10:58 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  2. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  3. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  4. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  5. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  6. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  7. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  8. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  9. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  10. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்