/* */

வைகுந்த ஏகாதசி விழா: முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் பகல்பத்து 7-ம் நாளான இன்று முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

HIGHLIGHTS

வைகுந்த ஏகாதசி விழா: முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
X

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் ஸ்ரீநம்பெருமாள் இன்று முத்து சாய்வு கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

108 வைணவ தலங்களில் முதன்மையான , பூலோக வைகுந்தம் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுந்த ஏகாதசி விழாவை முன்னிட்டு பகல்பத்து 7-ஆம் நாளான இன்று நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்தார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு விழா வருகின்ற 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழா கடந்த 3-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார். இந்நிலையில் பகல் பத்து 6-ஆம் நாளான நேற்று (09.12.2021) நம்பெருமாள் நீள்முடிகிரீடம், ரத்தின அபயஹஸ்தம், லட்சுமி பதக்கம், முத்துச்சரம், காசு மாலை அலங்காரத்தில் எழுந்தருளினார்.

பகல் பத்து 7-ஆம் நாளான (10.12.2021) இன்று நம்பெருமாள் முத்துசாய்வு கொண்டை, கபாய் சட்டை, வைர அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம், முத்துச்சரம் அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

Updated On: 10 Dec 2021 6:31 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு