/* */

தூத்துக்குடியை ஏற்றுமதி முனையமாக்க நடவடிக்கை-துடிசியா கூட்டத்தில் கனிமொழி எம்பி

தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சிறு,குறு நடுத்தர தொழில்துறை சங்கமான துடிசியா சார்பில் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடியை ஏற்றுமதி முனையமாக்க நடவடிக்கை-துடிசியா கூட்டத்தில் கனிமொழி எம்பி
X

தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி 

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த குறித்த ஆலோசனை கூட்டம் சிறு,குறு நடுத்தர தொழில்துறை சங்கமான துடிசியா சார்பில் காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக மகளிர் நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டார்.

கூட்டத்தில் துடிசியா சார்பில் அதன் தலைவர் நேரு பிரகாஷ் தூத்துக்குடி மாவட்ட தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் மற்றும் தொழில் தொடங்குவதற்கு தடையாக உள்ள விஷயங்களை எடுத்துரைத்தார். தமிழக அரசு ஈசி ஆப் டூயிங் பிசினஸ் என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால் இணையதளம் மூலமாக அனுமதி பெற வேண்டிய அந்த திட்டத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் பல்வேறு நிலையிலான அனுமதிகளை பெற வேண்டிய அவசியம் உள்ளது.

எனவே எளிதாக தொழில் தொடங்க வழிவகை செய்ய வேண்டும். தூத்துக்குடி முதல் மதுரை வரையிலான இண்டஸ்ட்ரியல் காரிடார் திட்டம் ஒன்றை நீண்டகாலமாக கிடப்பில் உள்ளது. அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு ஒரு கனரக தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். கடல் வழி, ஆகாய வழி, ரயில் வழி,சாலைவழி என நான்கு வழி போக்குவரத்து வசதிகளை கொண்ட ஒரே மாவட்டம் தூத்துக்குடி மாவட்டம் எனவே இங்கு பல தொழில் நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும்.

பல்வேறு தொழிற்சாலைகளும் தொழிலாளர்களையும் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவே உடனடியாக இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை துடிசியா தலைவர் நேரு பிரகாஷ் காணொளி வாயிலாக இந்த கூட்டத்தில் சமர்ப்பித்தார்.

தொடர்ந்து நடந்த காணொளி காட்சி கூட்டத்தில் கனிமொழி எம்பி பேசியதாவது:- எக்ஸ்போர்ட் ஹப் தூத்துக்குடியில் துவங்கவும், புட் பார்க் கொண்டுவர முயற்சி செய்வேன். எம்.எஸ்.எம்.இ பிரச்சனை குறித்து டெல்லியில் அமைச்சர் நிதின் கட்கரியுடன் பேசுவேன். என் ஏ சி எல் லேப் கொண்டுவர முயற்சி செய்வேன். தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு விமானப் போக்குவரத்துக்கு பணிகள், விரிவாக்கப் பணிகள் நடைபெறுகிறது. அதன் பின் சர்வதேச விமான நிலையமாக மாற முயற்சி செய்வேன். இஎஸ்ஐ பிரச்சனை தீர்க்கப்படும் மாவட்டத்திலுள்ள தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்டு ஒரு அமைப்பை ஏற்படுத்தி ஊரடங்கு முடிந்தவுடன் நேரடியாக நாம் சந்தித்துப் பேசுவோம் என்றார்.

கூட்டத்தில் துடிசியா பொது செயலாளர் ராஜசெல்வின், முன்னாள் தலைவர் கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 30 May 2021 10:42 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  8. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  9. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  10. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!