/* */

தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
X

தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கத்தின் சார்பில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்கத்தின் 30 ஆவது நிர்வாகக் குழு பதவியேற்பு விழா நடைபெற்றது.

மகாலிங்கம் ரோட்டரி இறைவணக்கம் வாசித்தார். கிருஷ்ணசாமி ரோட்டரி நான்கு வழி போதனை வாசித்தார். சங்கத்தின் உடனடி முன்னாள் தலைவர் மந்திரமூர்த்தி வரவேற்று பேசினார். சங்கத்தின் புதிய தலைவராக முஹம்மது இப்ராஹிம், செயலாளராக விக்னேஷ் மற்றும் நிர்வாகக் குழுவினர் பதவியேற்றுக் கொண்டனர். ரோட்டரி முன்னாள் ஆளுநர் பாஸ்கரன் தலைவருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இதைத்தொடர்ந்து தலைவர் முஹம்மது இப்ராஹிம் ஏற்புரை வழங்கி இந்த ஆண்டின் நிர்வாக குழுவை அறிமுகம் செய்தார். பின்னர் பல்வேறு மாணவர்கள் இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சமூக ஆர்வலர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. பார்வை இழந்தவர்களுக்கு வாட்சப் மூலம் பயிற்சி அளித்து வரும் பார்வை இழந்த பெண் ஒருவரும் கௌரவிக்கப்பட்டார்.

ரோட்டரி உதவி ஆளுநர் சிவராமகிருஷ்ணன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி அண்ணாமலை, ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஜேசையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ரோட்டரி மாவட்ட ஆளுநர் தேர்வு மீரான்கான் சலீம் கௌரவ விருந்தினர் உரையாற்றினார். முன்னாள் ஆளுநர் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். செயலாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.

பல்வேறு ரோட்டரி சங்க உறுப்பினர்கள், ஜேசீஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தூத்துக்குடி பியர்ல்சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் செய்தனர்.

Updated On: 17 July 2023 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!