/* */

தூத்துக்குடியில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்..

மத்திய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் வசதிக்காக தூத்துக்குடியில் இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்..
X

மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் பயிற்சி மையங்களில் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களின் வசதிக்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணயத்தால் நடத்தப்படும் SSC GD CONSTABLE மற்றும் SSC CHSL உட்பட பல்வேறு போட்டித் தேர்வுக்கான SSC இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றில் 45,284 காவலர் காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள பணியிடங்களுக்கான ளுக்கு அறிவிக்கப்பட்ட SSC CONSTABLE (GD) தேர்வு வருகிற ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதற்கான கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு ஆகும்.

மேலும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் SSC CHSL (Combined Higher Secondary Level) 4500 பணி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள் 04.01.2023 ஆகும். 18 வயது முதல் 27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 3 ஆண்டுகளும் வயதுச் சலுகையும் உண்டு.

மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர் http://ssc.nic.in என்ற இணையதள முகவரியைப் பார்வையிடவும். மேலும் SSC-MTS தேர்வானது விரைவில் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.

SSC GD (General Duty) CONSTABLE தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் SSC- CHSL, SSC MTS போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த பயிற்சி வகுப்புகள் அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்களை கொண்டு நடத்தப்படுகிறது. மேலும், வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் தங்களது PASSPORT SIZE புகைப்படத்துடன் அலுவலக வேலைநாட்களில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் 9942503151 என்ற வாட்ஸ்அப் எண்ணில் செய்தி அனுப்பவும். இந்த வாய்ப்பினை தூத்துக்குடி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

Updated On: 10 Dec 2022 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  4. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  5. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  6. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  7. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...
  8. தூத்துக்குடி
    விரைவில் தூத்துக்குடி பாலக்காடு விரைவு ரயில் சேவை!
  9. அரசியல்
    மோடி என்ன தான் சொன்னார்..? தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்..!
  10. குமாரபாளையம்
    ராமர், சீதா திருக்கல்யாண வைபோகம்