/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்.. ரூ. 8.62 கோடிக்கு தீர்வு...

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 அமர்வுகளில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 8.62 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் 13 இடங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம்.. ரூ. 8.62 கோடிக்கு தீர்வு...
X

தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கான ஆணையை மாவட்ட நீதிபதி குருமூர்த்தி வழங்கினார்.

நீதிமன்றங்களில் நிலுவைகளில் உள்ள வழக்குகளில் குறிப்பிட்ட சில வழக்குகளை விரைந்து முடித்து தீர்வு காணும் வகையில், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. மக்கள் நீதிமன்றம் மூலம் மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண முடியும்.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துதல், நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கும் பேசித் தீர்வு காண முயலுதல், வழக்குத் தரப்பாளர்களுக்குக் குறைந்த செலவில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்தல் போன்றவையே மக்கள் நீதிமன்றத்தின் நோக்கம் ஆகும்.

காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளத் தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்சனைகள் ஆகவை மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காண உகந்தவை.

மக்கள் நீதிமன்றம் மூலம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமல்லாமல் , நீதிமன்றத்துக்கு வர இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடலாம். இங்கு தீர்வுகாணப்பட்டால் அதற்குமேல் மேல்முறையீட்டிற்குப் போக முடியாது என்பதே மக்கள் நீதிமன்றத்தில் சிறப்பு அம்சம் ஆகும். இந்நிலையில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட த்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் 6 அமர்வுகளும், கோவில்பட்டியில் 2 அமர்வுகளும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 அமர்வுகளும், திருச்செந்தூர், விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் பகுதியில் தலா ஒரு அமர்வு உட்பட மொத்தம் 13 அமர்வுகளில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

சமாதானமாக செல்லக் கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நீதிபதிகள் மற்றும் காப்பீடு நிறுவன மேலாளர்கள், வங்கி மேலாளர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர், வழக்காடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 203 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 145 வழக்குகள் தீர்வு காணப்பட்டது. அதன் மொத்த தீர்வு தொகை ரூ. 2,92,77,850 வழங்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 3719 வழக்குகளில் ரூ. 5,69,96,300 மதிப்புள்ள 3592 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

மொத்தம் 3922 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 3737 வழக்குகள் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. மொத்த தீர்வு தொகை 8 கோடியே 62 லட்சத்து 74 ஆயிரத்து 150 ரூபாய் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில்,தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான பீரித்தா, முதுநிலை நிர்வாக உதவியாளர் தாமரை செல்வம், இளநிலை நிர்வாக உதவியாளர் முத்து லெட்சுமி, பணியாளர்கள் பால் செல்வம், நம்பிராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 13 Nov 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி காதல் மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    'யாரையும் நம்பாதே' - புகழ்பெற்ற பொன்மொழிகளின் ஆழமான பொருள்
  3. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  5. வீடியோ
    தலையை பாத்துட்டேன் அதுவே போதும்🥺..! #dhoni #msdhoni #csk #chepauk...
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  8. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  9. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  10. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...