/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 268 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை 268 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 268 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு…
X

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி பாரதி நகர் பூங்கா பகுதியில் வைத்து தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த பெரியநாயகம் (60) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த பழனிக்குமார் (39) மற்றும் சிலரை சிப்காட் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

மேலும், கடந்த 2.12.2022 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகண்ணுபுரம் பகுதியில் வைத்து தூத்துக்குடி தேவர் காலனியை சேர்ந்த பூல்பாண்டி (45) என்பவரை மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவரை சிப்காட் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்த இரு கொலை வழக்குகளில் கைதான பழனிக்குமார் மற்றும் மாரிமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

கடந்த 29.11.2022 அன்று ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்தோப்பு பகுதியில் வைத்து ஸ்ரீவைகுண்டம் மேல கோட்டை வாசல் தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் (30) என்பவரது செல்போனை கொள்ளையடித்த வழக்கில் ஆழ்வார்திருநகரி மாதங்கோவில் தெருவை சேர்ந்த மாரிமுத்து (27) மற்றும் சிலரை ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மாரிமுத்து மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

சிப்காட் மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் கைதான 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, பழனிக்குமார், மாரிமுத்து மற்றும் மாரிமுத்து ஆகியோரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 14 பேர் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 43 பேர் உட்பட 268 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Updated On: 28 Dec 2022 9:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்