/* */

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வழிப்பறி திருடர்கள் கைது

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2வழிப்பறி திருடர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வழிப்பறி திருடர்கள் கைது
X

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வழிப்பறி திருடர்கள்

சாத்தான்குளத்தில் பெண்ணிடம் நகை பறித்த 2 வழிப்பறி திருடர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேல சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கிருபைராஜ் மனைவி புஷ்பலதா (41). இவர் மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். நேற்று வேலைக்கு செல்வதற்காக இட்டமொழி சாலையில் காமராஜ் நகர் விலக்கில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 திருடர்கள் அவரை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்கசங்கிலியை பறித்தனர். அவர்களிடம் புஷ்பலதா போராடினார். ஆனாலும் அவர்கள் பலமாக அவரை தாக்கிவிட்டு சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தினர்.

சுதாரித்துக் கொண்ட புஷ்பலதா போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தில் நின்று கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். சிலர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வழிப்பறி திருடர்களை துரத்தினர். சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தில் வைத்து அந்த 2 பேரையும் மோட்டார் சைக்கிளுடன் மடக்கி பிடித்தனர். அதற்குள் மேலும் சிலரும் அங்கு வந்து சேர்ந்தனர்.

பொதுமக்கள் அந்த 2 திருடர்களுக்கும் தர்ம-அடி கொடுத்து சாத்தான்குளம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் அந்த திருடர்களிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில், அவர்கள் விஜயநாராயணம் ஆணியன்குளத்தைச் சேர்ந்த சங்கரன் மகன் முத்துக்குமார் (38), வல்லநாடு சந்திரன் மகன் ராஜேஷ் (30) என தெரியவந்தது. இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டது.

Updated On: 23 Oct 2021 1:14 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  3. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  4. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  5. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  6. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  7. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  8. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...
  9. காங்கேயம்
    வெள்ளகோவில் பகுதியில் தனியாா் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு...
  10. திருப்பூர்
    உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் திறப்பு