/* */

தூத்துக்குடியில் காவலர்களுக்கு ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகக் கூட்டம்…

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் ‘ஸ்மார்ட் காவலர் செயலி” குறித்த அறிமுக கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் காவலர்களுக்கு ஸ்மார்ட் காவலர் செயலி அறிமுகக் கூட்டம்…
X

ஸ்மார்ட் காவலர் செயலி குறித்த அறிமுகக் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.

தமிழ்நாட்டில் காவல்துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பாராமரிக்கவும் தமிழக காவல்துறையில் 'ஸ்மார்ட் காவலர் செயலி" காவல்துறை தலைமை இயக்குநரால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து இன்று (03.01.2023) முதற்கட்டமாக, தூத்துக்குடி நகரம் மற்றும் ஊரக உட்கோட்ட காவல்துறையினருக்கு 'ஸ்மார்ட் காவலர் செயலி"யை செல்போனில் பதிவிறக்கம் செய்வது மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்த அறிமுக கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின்போது, ஸ்மார்ட் காவலர் செயலி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. ஸ்மார்ட் காவலர் செயலி மூலம் காவல் துறையினரின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் அவற்றை பராமரிக்கவும், தரவுகளை முறையாகவும் சிறப்பாகவும் கையாளவும் காவல்துறையினருக்கு ஏதுவாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்மார்ட் காவலர் செயலியை காவல்துறையில் களப்பணியாற்றும் அலுவலர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், களப்பணியின்போது நிகழும் சம்பவங்களை உடனுக்குடன் பதிவு செய்வதற்காகவும், கள அலுவலர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டாலோ அல்லது உடனடி தேவை ஏற்பட்டாலோ அதுகுறித்த செய்தியினை உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசும்போது, காவர்கள் தங்களுடைய காவல் நிலையத்திற்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சட்டவிரோத செயல்கள் நடவாமலும், புகார் அளிக்க வரும் பொதுமக்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்டு 'மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி, அதன் மூலம் குற்றமில்லாத தூத்துக்குடி மாவட்டமாக உருவாக்கி சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் காவல் துறையினருக்கு விளக்கம் அளித்தார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சி.சி.டி.என்.எஸ் காவல் உதவி ஆய்வாளர் விக்டோரியா அற்புதராணி உள்ளிட்ட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jan 2023 1:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  3. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  4. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  5. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. நாமக்கல்
    திருச்செங்கோடு நகராட்சி குப்பைக்கிடங்கில் தீ விபத்து: மாவட்ட ஆட்சியர்...
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூரில் கணவன் மற்றும் மனநலம் குன்றிய மகனுடன் மனு அளிக்க வந்த...
  9. வீடியோ
    Desperate ஆன SRH ஓனர் | பயந்து துள்ளி குதித்த Sakshi | #csk #srh...
  10. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்