/* */

கர்ணன் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு

கர்ணன் திரைப்படம் ஓடும் தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கர்ணன் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு
X

தூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் வெளியாகியுள்ள சினிமா தியேட்டரில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள ஒரு தியேட்டரில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காட்சிக்கு படம் பார்க்க வந்தவர்களில் 5பேர் குடிபோதையில் இருந்துள்ளனர். இதனால் தியேட்டர் நிர்வாகத்தினர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்து, டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்து திருப்பி அனுப்பி விட்டார்களாம். இந்நிலையில் தியேட்டருக்குள் அனுமதிக்காததால் கோபத்தில் மீண்டும் தியேட்டருக்கு வந்த அவர்கள் இரவு 11 மணியளவில் தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். ஆனால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தென்பாகம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தை டவுண் டிஎஸ்பி கணேஷ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது தொடர்பாக தியேட்டரில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 14 April 2021 12:04 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  4. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  6. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  7. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  8. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  9. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  10. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு