/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனைமர விதைகள் விதைக்கும் பணி தீவிரம்…

தூத்துக்குடி மாவட்டத்தில், மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் ஒரு கோடி பனைமர விதைகள் விதைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கோடி பனைமர விதைகள் விதைக்கும் பணி தீவிரம்…
X

பனைமர விதைகளை விதைக்கும் பணியில் ஈடுபட்ட மதர் சமூக சேவை நிறுவனத்தினர்.

அழிந்து வரும் பனைமரத்தை பாதுகாக்கும் வகையில் நாடு முழுவதும் அதிகளவு பனை மரங்களை வளர்க்க வேண்டும் என மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பனைமர விதைகள் விதைக்கும் பணியில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில், ஒரு கோடி பனை மர விதைகள் விதைப்பதை இலக்காகக் கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் புயல், சூறாவளி, பூகம்பம், மண் அரிப்பு போன்ற இயற்கை சீற்றங்களை தடுக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், கடற்கரை, தீவு பகுதிகளிலும் நீர் பிடிப்பு பகுதிகளான ஆற்றங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால் கரை, ஓரங்களிலும், சாலை ஓரங்களிலும் அரசு புறம்போக்கு இடங்களிலும் விருப்பப்பட்டு கேட்ட தனியார் இடங்களிலும் பனை மர விதைகள் விதைக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் தொடங்கப்பட்டு 36 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் கி. செந்தில்ராஜ் தலைமையில், மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் முன்னிலையில் ஒரே நாளில் காயல்பட்டினம் கடற்கரையில் 36 ஆயிரம் பனை மர விதைகள் விதைக்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில், தற்போது வரை 70 லட்சத்து 33 ஆயிரத்து 439 பனை மர விதைகளை விதைக்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மதர் சமூக சேவை நிறுவன இயக்குநருமான எஸ். ஜே. கென்னடி தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, மதர் சமூக சேவை நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்கத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் ஒரே நாளில் பத்தாயிரம் பனை மர விதைகள் விதைக்கும் சமீபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஏ.ஆர்.டி ராஜ்கமல் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் நகர தலைவர் முத்துக்குமார், ஏரல் பகுதி தலைவர் சங்கர் கணேஷ், சமூக ஆர்வலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மதர் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான எஸ்.ஜே. கென்னடி கலந்து கொண்டு ஒரே நாளில் 10 ஆயிரம் பனை மர விதைகள் விதைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், லீட் டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ். பானுமதி மற்றும் பனை பொருள் உற்பத்தியாளர் குழு நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவன இயக்குநர்கள் கலந்து கொண்டு பனைமர விதைகளை கடற்கரை பகுதியில் விதைத்தனர். நிகழ்ச்சியின்போது, பனையை வளர்ப்பதற்கும், பனையை பாதுகாப்பதற்குமான உறுதிமொழியை அவர்கள் எடுத்துக் கொண்டனர்.

Updated On: 1 Nov 2022 11:13 AM GMT

Related News

Latest News

  1. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  2. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  3. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  4. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  5. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  7. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  8. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  9. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  10. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை