/* */

தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும்.. அமைச்சர் நேரு தகவல்...

தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு தெரிவித்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையம் மார்ச் மாதம் திறக்கப்படும்.. அமைச்சர் நேரு தகவல்...
X

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய பணிகளை அமைச்சர் நேரு பார்வையிட்டார்.

தூத்துக்குடியில் வாகன நெருக்கடியை தவிர்க்கவும், பொதுமக்கள் எளிதாக பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வசதியாகவும் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. இதில், பழைய பேருந்து நிலையம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆவதால் அதை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ. 53 கோடியில் நவீனப்படுத்தும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அதுவரை அருகில் உள்ள மைதானம் தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்று வரும் பழைய பேருந்து நிலைய அபிவிருத்தி பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் நேரு இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்விற்குப் பிறகு அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 53.40 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நவீன பேருந்து நிலைய பணிகள், ரூ. 14.96 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வணிக வளாகப் பணிகள், ரூ. 22.60 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வி.வி.டி. சாலை பணிகள் ஆகியவை இன்று ஆய்வு செய்யப்பட்டது. மாநகராட்சியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வணிக வளாகம் மற்றும் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் இறுதியில் பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும். மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளும் ஆய்வு செய்யப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 10 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் புகார்கள் குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.

ஆய்வின்போது, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் அலுவலர்கள், கவுன்சிலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 4 Jan 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?