/* */

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 57 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு
X

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 57 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

தூத்துக்குடியில் இயங்கி வந்த அண்ணா பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 57 கோடியில் நான்கு தளங்களுடன் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி அம்பேத்கர்நகரில் ரூ. 29 கோடியில் ஸ்டெம் பார்க் புதிதாக கட்டப்பட்டு உள்ளது.

புதிய பேருந்து நிலையம் மற்றும் ஸ்டெம் பார்க் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பேருந்து நிலையம் மற்றும் ஸ்டெம் பார்க் ஆகியவற்றை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், சண்முகையா, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ. 87 கோடி மதிப்பில் பல்வேறு கழிவுநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் நேரு துவக்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சத்தியபாமா திருமண மண்டபத்தில் வைத்து கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏழை – எளிய பெண்கள் 125 பேருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிதாக திறக்கப்பட்ட தூத்துக்குடி பேருந்து நிலையம், ஸ்டெம் பார்க் ஆகியவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இருப்பினும், பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள்கிழமை முதல் வழக்கம்போல திருநெல்வேலி, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 Oct 2023 6:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  6. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் விசாக நட்சத்திர ஆலயத்தில், மே.1-ம் தேதி குருப்பெயர்ச்சி:...
  9. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்